இறப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் மனதில் ஓடும் விஷயங்கள் என்னவாக இருக்கும்!
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில் என்ன விதமான எண்ணங்கள் ஓடும் என்பது முதல்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில் என்ன விதமான எண்ணங்கள் ஓடும் என்பது முதல்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இறப்பு நேரிடும் முன் கடைசி தருணங்களில் என்ன நினைக்கிறது என்பதை விஞ்ஞானிகள் தற்செயலாக பதிவு செய்துள்ளார்கள்.
நோயாளி ஒருவர் கால்-கை வலிப்புக்கான சிகிச்சையில் இருந்தார். 87 வயதான அவருக்கு சிகிச்சை அளிக்க எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) உடன் இணைக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மரணத்தின் முதல் 15 நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த நபர் தனது வாழ்க்கையின் கடைசி தருணங்களில், தனது வாழ்வின் சிறந்த நிகழ்வுகளை நினைவில் வைத்திருப்பதாக, அதன் மூலம் தெளிவாக பதிவாக உள்ளது. இந்த 15 நிமிடங்கள் EEGயில் பதிவு செய்யப்பட்டது. நோயாளியின் இறுதி இதயத் துடிப்பு இறந்த 30 வினாடிகளின் போது மிக வேகமாக இருந்தததோடு, அந்த நேரத்தில் ஒரு தனித்துவமான அலை பதிவு செய்யப்பட்டது என்பதைக் காட்டுகிறது. இந்த அலை காமா அலைவுகள் (Gamma Oscillations) என்று அழைக்கப்படுகிறது. இது நினைவை மனதில் சுமந்து கனவு காண்பது போன்றது.
இது குறித்து மேலும் அதிக ஆராய்ச்சி தேவை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், ஒரு நபர் இறப்பதற்கு முன் தனது வாழ்நாளின் சிறந்த நினைவுகளை அசை போடுகிறார் என்று உறுதியாகக் கூறலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
மேலும் படிக்க | அகழ்வாராய்ச்சி: 5300 ஆண்டு பழமையான மண்டை ஓட்டின் மூலம் வெளியான அதிசய தகவல்!
உடல் இறந்த பிறகும் மனம் சுறுசுறுப்பாக இருக்கும்
மரணம் சம்பவித்த நேரத்தில் அந்த நபரின் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது என்று இந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டது. கடைசி நேரத்தில் நீங்கள் ஒரு கனவைக் கனவு காண்பது போன்ற நிலையை மனித மனம் அடையும் என்றும் விஞ்ஞானிகள் கூறினர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், உடல் இறந்த பிறகும் மனம் சுறுசுறுப்பாக இருக்கும் என்கின்றனர்.
இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட லூயிஸ்வில்லி ஜெமர் (Louisville Zemmar) பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அஜ்மல் ஜெம்மர், காமா அலைவு (Gamma Oscillations) அலையின் போது நமது மூளை கடந்த காலத்தின் மகிழ்ச்சியான சம்பவங்கள் நினைவில் கொள்ளத் தொடங்குகிறது என்றார். இந்த கடைசி நேரத்தில் நம் மூளை வாழ்க்கையின் கடைசி தருணங்களில் சில முக்கியமான தருணங்களை நினைவில் வைத்திருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
மனிதர்களைத் தவிர, எலிகளிலும் இதேபோன்ற மூளை அலை மாற்றங்கள் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் மனிதர்களில் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றும், இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | Cyber Attack: கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் சைபர் தாக்குதல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR