மனிதர் புரிந்துக் கொள்ள இது மனிதக்காதல் அல்ல, பெண் மீது டால்பின் கொண்ட காதல்
காதலில் விழுந்த டால்பின்! `பிரேக்அப்` ஆனதும் தற்கொலை செய்துக் கொண்டது...
காதலுக்கு கண் இருக்காது, காதல் வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது பழமொழி என்று நினைக்கலாம். ஆனால், உண்மையான நிதர்சன மொழி என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், விலங்குகளுக்கும் காதல் வந்தால் இப்படித்தான் இருக்கும் என்றால் சந்தேகம் வரலாம். அதிலும், விலங்குக்கும், மனிதனுக்கும் இடையில் காதல் வந்தது என்றால், கொஞ்சம் சந்தேகமும் வரலாம்.
உண்மையில், ஒரு விலங்கு ஒரு பெண்ணை மிகவும் காதலித்தது. காதலியை பிரிந்ததும் தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பீட்டர் என்ற டால்ஃபின் ஒரு பெண்ணைக் காதலித்தது (Animal Love), காதலில் பிரிவு வந்ததும், இதயம் உடைந்து, உயிரை மாய்த்துக் கொண்டது.
'தி சன்' நாளிதழில் வெளியான செய்தியின்படி, 1960களில், ஆறு வயதான பாட்டில்நோஸ் டால்பின், 23 வயது ஆராய்ச்சி உதவியாளர் மார்கரெட் ஹோவ் என்பவருடன் தொடர்பு வைத்திருந்தது. மார்கரெட் பத்து வார ஆராய்ச்சிக்காக டால்பினுடன் நேரம் கழித்தார். அதன் பிறகு மார்கரெட் சென்றதும் பிரிவால் மனமுடைந்த பீட்டர், சுவாசிக்க மறுத்து, தனது தொட்டியின் அடிப்பகுதியில் மூழ்கி இறந்துவிட்டது. அந்த சம்பவம், இன்றும் டால்பின் 'தற்கொலை' செய்து கொண்ட நிகழ்வாகவே கருதப்படுகிறது.
Also Read | Dolphin Love: டால்பினுடன் ஆறு மாதங்கள் ‘உறவில்’ இருந்த விசித்திர மனிதர்..!!
மார்கரெட் மற்றும் பீட்டர் முதன்முறையாக நாசாவின் நிதியுதவியுடன் மனித மொழியைப் புரிந்துகொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் டால்பின்களுக்கு கற்பிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு பரிசோதனையில் சந்தித்தனர். இந்த சோதனையின் நோக்கம் மனிதர்கள் டால்பின்களுடன் எப்படி பேச முடியும் என்பதைக் கண்டறிவது ஆகும். மார்கரெட் மற்றும் பீட்டர் பத்து வாரங்கள் ஒன்றாக ஒரு பெரிய நீர் வளாகத்தில் வாழ்ந்தனர்.
22 அங்குல ஆழமான கடல் நீரில் 10 வாரங்கள் காதல் (Bizaree Love)
மார்கரெட் தனது முழு நேரத்தையும் பீட்டருடன் 22 அங்குல ஆழமான கடல் நீரில் கழித்தார். டால்பின்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக, மார்கரெட், டால்பின் பீட்டருடன் ஒன்றாகவே இருக்க வேண்டியிருந்தது. பூமியில் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்று டால்பின் என்று கூறப்படுகிறது.
டால்பினுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் சோதனை தோல்வியடைந்தாலும், பரிசோதனையின் நான்காவது வாரத்தில் பீட்டருக்கு பாலுறவு தூண்டப்பட்டு உல்லாசமாக இருந்ததை மார்கரெட் கவனித்தாள். பீட்டருடன் ஒரு ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்தியதாக மார்கரெட் ஒப்புக்கொண்டார். அதோடு, தன்னையே சுற்றி சுற்றி வந்த பீட்டரின் ஏக்கத்தைப் பார்த்த இளம் ஆராய்ச்சியாளர் மார்கரெட் தனது கவனத்தை டால்பின் மீது திருப்பி அதை மகிழ்ச்சியாக வைத்திருந்தார்.
பத்து வார பரிசோதனை முடிந்ததும், மார்கரெட்டிடம் இருந்து பீட்டர் தனது இடத்துக்கு அனுப்பப்பட்டது. டாக்டர் ஜான் லில்லியின் மேற்பார்வையில் புளோரிடாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் வைக்கப்பட்ட பீட்டர், சில வாரங்களுக்குப் பிறகு மார்கரெட் இல்லாமல் சோர்ந்து போனது. இறுதியில் மனம் உடைந்து 'தற்கொலை' செய்து கொண்டது.
பீட்டரின் மரணத்திற்கு பிறகு ஜான் லில்லியிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்தது என்று தி கார்டியன் பத்திரிகையிடம் மார்கரெட் கூறினார். பீட்டர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதாக மார்கரெட் கூறினார்.
ALSO READ | ‘எல்லாமே அலர்ஜி என்றால் எப்படித் தான் வாழ்வது’; இளம் பெண்ணின் பரிதாப வாழ்க்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR