உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவி வழங்குவதற்காக, புதன்கிழமை (ஏப்ரல் 13) அமெரிக்கா, போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர் இராணுவ உதவியை அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கிய பின்னர் முதல் முறையாக உக்ரைனுக்கு, அதிக சக்தி திறன் கொண்ட உபகரணங்களை அமெரிக்கா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உக்ரைனுக்கான சமீபத்திய இராணுவ உதவியை அறிவித்து அதன் விவரங்களை பகிர்ந்து கொண்டார். முன்னதாக, உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.


புதிய ராணுவ உதவி தொகுப்பில் 11 எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள், 18 ஹோவிட்சர்கள் 155மிமீ ரகம், 40,000 பீரங்கி குண்டுகள், பீரங்கி எதிர்ப்பு ரேடார்கள், 200 கவச வாகனங்கள் மற்றும் 300 கூடுதல் "ஸ்விட்ச்ப்ளேட்" ட்ரோன்கள் ஆகியவை அடங்கும். அமெரிக்காவினால் உக்ரைனுக்கு ஹோவிட்சர்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை.


அமெரிக்க ஜனாதிபதி உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடிய பிறகு, வெள்ளை மாளிகை அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது.


"நான் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேசினேன், மேலும் உக்ரைனுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற பாதுகாப்பு உதவிகளுக்கு எனது நிர்வாகம் கூடுதலாக 800 மில்லியன் டாலர்களை அங்கீகரிக்கிறது என்பதை அவருடன் பகிர்ந்து கொண்டேன்" என்று பிடன் கூறினார்.


மேலும் படிக்க | உக்ரைன் சமாதானப் பேச்சுக்கள் முட்டுச்சந்தை எட்டியுள்ளது: விளாடிமிர் புடின்


மேலும், “டான்பாஸ் பகுதியில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்த தயாராகி வரும் நிலையில், தன்னை தற்காத்துக் கொள்ளும் திறன்களை உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து வழங்கும்” என்றும் அவர் கூறினார்.


ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்து போராட உதவும் வகையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கி உதவுவது மிகவும் முக்கியம் என்று பிடென் கூறுகிறார்.


 முன்னதாக, ரஷ்யப் படைகள் வடக்கு உக்ரைனில் இருந்து பின்வாங்கிய பின்னர் முதல் முறையாக பொதுவில் போரைப் பற்றி உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் அதன் "உன்னதமான" நோக்கங்களை அடையும் என்று உறுதியளித்தார். 


மேலும், போர் நீண்ட காலம் நீடிக்கும் என்றும், உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை "முட்டுச்சந்தை" அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் பற்றிய போலியான கூற்றுக்கள் மற்றும் உக்ரைன் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் பாதுகாப்பு உத்தரவாத கோரிக்கைகள் காரணமாக கிவ் சமாதானப் பேச்சுக்களை தடம் புரண்டதாக புடின் கூறினார்.


மேலும் படிக்க | India - US 2+2 Dialogue: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்; உறுதியாக பேசிய இந்தியா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR