சீன  வைரஸ் காரணமாக, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா ட்ராகனை ஒழித்து கட்டும்  திட்டத்தை உருவாக்கியுள்ளது. டிராகன் பிழைப்பதற்கான வாய்ப்பு இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்கா சீனாவுக்கு 60 நாட்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இப்பொழுது அமெரிக்கா சீன நிறுவனங்களை மிகத் தீவிரமாக கண்காணிக்கும். இந்த நிறுவனங்கள் அமெரிக்க தொழில் நுட்பத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடனடியாக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


ALSO READ | சீனாவின் துரோகத்தினால் கோபமாக உள்ள அமெரிக்காவில் உள்ள NRI நடத்திய அமைதி போராட்டம்...!!!


புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனா பரப்பி, அனைவரின் வாழ்க்கையையும் புரட்டி போட காரணமாக இருக்கும் சீனா (China), பல விதமான  குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. உலக அரங்கில், சீனா வலுவான எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்கா (America) மிக பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருவது குறிப்பிடத்ததக்கது. அமெரிக்காவில் கொரோனாவா தொற்றால் இது வரை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  1 லட்சத்தி 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்து விட்டனர். பொருளாதாரமும் மிக மோசமாக பாதிக்கபப்ட்டுள்ளது. இதனால், சீனாவை (China) கட்டுப்படுத்த அமெரிக்கா (America,) ஒரு புதிய திட்டத்தை தயாரித்துள்ளது.


ALSO READ | சீனாவில் மீறப்படும் மனித உரிமைகள்... நடவடிக்கை எடுக்க UN வல்லுநர்கள் கோரிக்கை...!!!


உலகையே ஆபத்தில் ஆழ்த்தியுள்ள சீனாவை பழி வாங்கும் எண்ணத்துடன்  அமெரிக்கா(US) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


பெய்ஜிங்கில்(Beijing), இராணுவ ஆட்சியால் கட்டுப்படுத்தப்படும் 20 சீன நிறுவனங்களை கண்டறிந்துள்ள அமெரிக்கா அதன் பட்டியலை தயாரித்துள்ளது. சீன நிறுவனங்கள் அமெரிக்காவிலிருந்து தொழில்நுட்பத்தை திருடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த குற்றம் தொடர்பாக விசாரணைகள் துரிதபடுத்தப்பட்டு, உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


கொரோனா(Corona) பாதிப்பு மற்றும் சீனாவின் ஆதிக்க மனப்பான்மையினால் பிரச்சனையை எதிர் கொண்டு வரும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. தென் சீனக் கடல் ஒப்பந்தத்தை பின்பற்ற வேண்டும் என்று ஆசியான் (ASEAN) கூறியுள்ளது. தெற்காசிய  நாடுகளின் தலைவர்கள் தென் சீனக் கடல் பகுதிக்கான உரிமைகள், 1982 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட  ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


மொழியாக்கம்: வித்யா கோபாலகிருஷ்ணன்.