சீனாவில் மீறப்படும் மனித உரிமைகள்... நடவடிக்கை எடுக்க UN வல்லுநர்கள் கோரிக்கை...!!!

சீனாவில் மனித உரிமைகள் மீறப்பட்டு ஜனநாயக படுகொலை நடப்பதால், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா வல்லுநர்கள் கோரியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 27, 2020, 03:22 PM IST
  • சீனாவில் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என ஐநா கோரிக்கை வைத்துள்ளனர்.
  • போராட்டக்காரர்களை ஒடுக்க போலீஸார் இராசாயன பொருட்களை பயன்படுத்தினார்கள் என்றும் ஐநா வல்லுநர்கள் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
  • COVID-19 தொடர்பான தகவல்களை வெளியிடும், மருத்துவ பணியாளர்கள், பத்திரிக்கை துறையினர் மீது நிர்வாகத்தினர் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
சீனாவில் மீறப்படும் மனித உரிமைகள்... நடவடிக்கை எடுக்க UN வல்லுநர்கள்  கோரிக்கை...!!! title=

சீனாவில் காவல் நிலையங்களில் பெண் போராட்டக்காரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்றும் சுகாதார பணியாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் எனவும் ஐநா வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

ஜெனீவா (Geneva): கம்யூனிஸ்ட் நாடான சீனாவில் (China), அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்று ஐநா வல்லுநர்கள் கூறியுள்ளதாக, ஐநா மனித உரிமைகள் ஆணையம் (OHCHR) தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் (Hong Kong)நடைபெற்ற போராட்டங்கள், ஜனநாயகத்திற்கு எதிராக ஒடுக்கப்படுகின்றன என்றும், போராட்டக்காரர்களை ஒடுக்க போலீஸார் இராசாயன பொருட்களை பயன்படுத்தினார்கள் என்றும் ஐநா வல்லுநர்கள் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இது தவிர சீனாவில் காவல் நிலையங்களில் பெண் போராட்டக்காரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்றும் சுகாதார பணியாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் எனவும் ஐநா வல்லுநர்கள் கூறியுள்ளனர். அங்கே ஜனநாயக படுகொலை நடக்கின்றது.

ALSO READ | காற்றில் பறந்த ஜி ஜின்பிங்-ன் வாக்குறுதிகள்… உலக மன்றத்தில் சீனாவின் நிலை என்ன ….!!!

Xinjiang மற்றும் Tibet பகுதிகளில், மத சிறுபான்மையினர் கொடுமைபடுத்தப்படுகின்றனர். அங்கே மனித உரிமைகள் மீறுவதாக குரல் எழுப்புபவர்கள் குரல் அடக்கப்படுகின்றது. அவர்கள் காணாமல் போகின்றனர். மேலும் சிறுபான்மையினர் மீது அடக்கு முறை பிரயோகிக்கப்பட்டு, அவர்கள் பல வகைகளில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

COVID-19 தொடர்பான தகவல்களை வெளியிடும், மருத்துவ பணியாளர்கள், பத்திரிக்கை துறையினர் மீது நிர்வாகத்தினர் கடுமையாக நடவடிக்கைகளை எடுக்கின்றனர். அவர்கள் தவறான தகவல்களை வெளியிடுவதாகவும், சட்டம் ஒழுங்கை குலைக்க முயற்சிப்பதாகவும் கூறி, அவர்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஹாங்காங் (Hong Kong) மக்களுடன்  எந்த விதத்திலும் கலந்தாலோசனை செய்யாமல் தேசிய மக்கள் காங்கிரஸ், ஹாங்காங்கிற்கான  தேசிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐநா மனித உரிமைகள் ஆணையம் (OHCHR) தெரிவித்துள்ளது. இது ஏற்றுக்கொள்ளப்பட்டால், சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும் இது இந்த பிராந்தியத்தில், தீவிர சிவில் மற்றும் அரசியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இந்த ஆணையம் கவலை வெளியிட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு சட்டம் அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழி வகுக்கும் எனவும், இதனால் சீனாவின் பாதுக்காப்பு அமைப்புகள் அதிகாரம் பெற்று, அடக்குமுறைகள் அதிக அளவில் நடக்கும் என ஐநா மனித உரிமைகள் ஆணையம் அச்சம் வெளியிட்டுள்ளது.

ALSO READ | கொரோனா தொற்று மிதமான அளவில் உள்ளவர்களுக்கு ப்ளாஸ்மா சிகிச்சை பலனளிக்கிறதா…!!!

வரைவுச் சட்டம் மூலம் ஹாங்காங்கின், கலாச்சார மற்றும் மொழியியல் ரீதியாக சிறுபான்மையினராக உள்ள மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் என்றும், 1984 ஆன் ஆண்டின் சீன-பிரிட்டிஷ் கூட்டு பிரகடனத்தின் கீழ் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுயாட்சி மற்றும் அடிப்படை உரிமைகள்  மற்றும் “ஒரு நாடு, இரண்டு அமைப்புகள் நிர்வாக கட்டமைப்பு” காற்றில் பறக்க விடப்படும் எனவும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

சீனா அதிகாரிகளின் உத்தரவின் பேரில், காரணம் எதுவும் இல்லாமல், கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் நியாயமாக  நடக்க வாய்ப்பு ஏதும் இல்லை என்ற நிலை தான் உருவாகியுள்ளது.

சீனாவில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட வேண்டும் என ஐநா வல்லுநர்கள் கருத்து கூறியுள்ளனர். மேலும் சீனா உள்ள மனித உரிமை மீறல் தொடர்பான விஷயங்களை ஆராய ஐநா வல்லுநர்களை  அழைக்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Trending News