டிக்டாக் உள்ளிட்ட சீன சமூக ஊடக செயலிகளை (Social Media Apps) தடை செய்வது குறித்து அமெரிக்கா (America) தீவிரமாக ஆலோசித்து  வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லடாக்கில், கல்வான் பள்ளத்தாக்கில், சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியா-சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த மோதலில் அமெரிக்கா இந்தியாவுக்கு தன் ஆதரவை அளித்து வருகின்றது.


ALSO READ: Somaliland தைவான் இடையிலான ஒப்பந்தத்தினால் அதிர்ச்சியில் உள்ள சீனா..!!!


சீன அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டிக்டாக் (Tiktok), ஹலோ உள்ளிட்ட பல சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது.


இந்திய அரசைத் தொடர்ந்து அமெரிக்காவும் இது குறித்து சிந்தித்து வருவதாகத் தெரிகிறது. “ நான் இதைப் பற்றி அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு முன்னால் வெளியிட விரும்பவில்லை. எனினும், இது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்” என மைக் பாம்பியோ (Mike Pompeo) கூறியுள்ளார்.


அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் டிக்டோக்  பயனர் தரவை கையாள்வது குறித்து தேசிய பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளனர்.  சீன (Chinese) சட்டம், உள்நாட்டு நிறுவனங்களை, சீன கம்யூனிஸ்ட் கட்சியால் கட்டுப்படுத்தப்படும் உளவுத்துறை பணிகளை ஆதரிக்கவும் ஒத்துழைக்கவும் கோரக்கூடும் என்ற கவலை தங்களுக்கு உள்ளதாக அமெரிக்க சட்ட இயக்குனர்கள் கூறி வருகின்றனர். எனினும், உலகளவில் வாடிக்கையாளர்களை இழக்காமல் இருக்கும் பொருட்டு, இந்த செயலி, தன் சீன வேர்களை மறைத்து வருகிறது.


கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக இருந்ததாக அமெரிக்கா சீனாவை குற்றம் சாட்டி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக ரீதியாகவும் சுமார் இரண்டு ஆண்டு காலமாக பல சச்சரவுகள் நிலவுகின்றன. ஹாங்காங்கில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்கா கோவமாக உள்ளது.


டிக்டாக் என்பது ஒரு குறுகிய வடிவ வீடியோ செயலியாகும். இது சீனாவை தளமாகக் கொண்ட பைட் டான்ஸுக்குச் சொந்தமானது.


ஹாங்காங் மீது சீனா புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை திணித்துள்ள நிலையில், ஹாங்காங் சந்தைகளிலிருந்தும் இன்னும் சில நாட்களில் டிக்டாக் செயலி அகன்றுவிடும் என்றும் தகவல்கள் வந்துள்ளன. 


ALSO READ: ரஷ்யாவை சீண்டும் சீனா, நட்பின் கண்ணை மறைத்த சுயநலம்!!