அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ்டி மற்றும் ஆண்ட்ரூ மெக்கன்ஸி ஜோடி, கடந்தாண்டு ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிர் தப்பியுள்ளனர். போக்குவரத்து சிக்னலில் நிக்காமல் வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியதில் அந்த விபத்து நிகழந்ந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏறத்தாழ சுமார் 50 அடி தூரத்திற்கு இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு கொடூரமான விபத்தில் சிக்கிய அவர்களுக்கு, கடுமையான ரத்தப்போக்கு, நுரையீரல், எலும்புகளில் பலத்த காயம் என அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேற்கொண்ட சீரிய அறுவை சிகிச்சைக்கு பின் அவர்களின் உயிர் காப்பற்றப்பட்டது. 


விபத்துக்கு, 3 நாள்கள் கழித்து ஆண்ட்ரூ கண் விழித்துள்ளார். கண் விழித்ததும், தான் 1993ஆம் ஆண்டில் இருப்பதாக எண்ணியுள்ளார். விபத்தால் அவருக்கு நியாபக மறதி ஏற்பட்ட 29 ஆண்டு கால வாழ்வையே மறந்துபோய்விட்டார். அவர்களின் சொந்த மனைவி, மகளை அவரால் அடையாளம் காண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். 


மேலும் படிக்க | தந்தைக்கு உல்லாச அழகிகளை விருந்தாக்கிய மகள்... 100ஆவது பிறந்தநாளுக்கு பரிசு!


இதுகுறித்து, விபத்தில் காயமடைந்த அவரின் மனைவி கிறிஸ்டி கூறுகையில்,"என்னை பார்த்தே அவர்,'என் மனைவி எங்கே?, என் மனைவி எங்கே?' என கேட்கிறார். நான் மருத்துவமனையில் பணியாற்றுபவர் என அவர் நினைத்துக்கொண்டார்" என்றார். 


மேலும், ஆண்ட்ரூவின் நினைவு எப்போதாவது திரும்புமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, அவரது மனைவி கிறிஸ்டி, தனது கணவரையும் தனது அறையிலேயே வைக்கும்படி மருத்துவமனை ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.  ஏனெனில் இது அவரது நினைவாற்றலை திரும்ப பெற உதவும் என்று அவர் நினைத்துள்ளார்.


"அவர் என்னிடம் சில விஷயங்களைக் கேட்கத் தொடங்கினார், நான் ஆச்சரியப்பட்டேன். ஆனந்த கண்ணீர் இருந்தது, 24 மணி நேரத்திற்குள் அவர் ஒரு புதிய நபராகிவிட்டார். 11 நாட்கள் மருத்துவமனையிலும், மறுவாழ்வு மைய சிகிச்சைக்குப் பிறகு, தம்பதியினரால் நடக்க முடிந்தது.


அவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்று விடுமுறை தினத்தை கழித்துள்ளனர். அந்த பயணத்தின்போது, தான் ஆண்ட்ரூ மீண்டும் தனது மனைவியிடம் தன்னை திருமணம் செய்துகொள்வாயா என கேட்டுள்ளார். கடைசிவரை அவருக்கு நினைவு திரும்பவில்லை என்றாலும், விபத்துக்கு பிறகு தன்னை பார்த்துக்கொண்ட அன்பினாலும், பாசத்தாலும் கிறிஸ்டியிடமே அவர் தஞ்சம் புகுந்துள்ளார். இந்த காதல் ஜோடிக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 


மேலும் படிக்க | 9 மனைவிகள் பத்தலையாம்... 10வதும் வேணுமாம்! அடம்பிடிக்கும் பிரபலம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ