காட்மண்டு: உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க மலையேறி ஒருவர் உயிரிழந்தார், இது இந்த பருவத்தின் நான்காவது மரணம் என்பது குறிப்பிடத்தக்கது. எவரெஸ்ட் சிகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஐந்து மலையேறிகள் இறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சியாட்டிலை தளமாகக் கொண்ட மருத்துவத்துறையைச் சேர்ந்த மருத்துவர், முகாம் II இல் திடீரென உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை


69 வயதான ஜொனாதன் சுகர்மேன், மே முதல் நாளன்று நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் 21,000 அடி உயரத்தில் இருந்தபோது உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். அவரது உடலை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று அவரது பயண அமைப்பாளர் கூறினார்.


மேலும் படிக்க | இணைய பயன்பாட்டில் பிற நகரங்களையும் உலகையும் பின்னுக்குத் தள்ளும் இந்திய கிராமங்கள்


ஜொனாதன் சுகர்மேன் என்ற அந்த மருத்துவர் மற்றும் மலையேறி, சுமார் 6,400 மீட்டர் தொலைவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இறந்தார் என்று பயண அமைப்பாளர் பெயுல் அட்வென்ச்சரின் மேலாளர் மோகன் கஃப்லே ஹிமாலயன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.


வாஷிங்டனை தளமாகக் கொண்ட நிறுவனமான இன்டர்நேஷனல் மவுண்டன் கைட்ஸ் (ஐஎம்ஜி) ஏற்பாடு செய்திருந்த மலையேற்றப் பயணத்தில் அவர் கலந்துக் கொண்டார். பெயுல் அட்வென்ச்சர் உள்நாட்டில் IMG பயணத்தை நிர்வகிக்கிறது.


நேபாளத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் செவ்வாயன்று ஒரு அறிக்கையில் சுகர்மேனின் மரணத்தை உறுதிப்படுத்தியது, ஆனால் கூடுதல் விவரங்கள் எதையும் வழங்கவில்லை.


மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி சவால்.. திப்பு சுல்தானின் உருவப்படத்தை நீக்க முடியுமா?


அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், "தூதரகம் டாக்டர் சுகர்மேனின் குடும்பத்தினருடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது" என்றும்  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


IMG இன் உரிமையாளர் எரிக் சைமன்சன், இந்த விவகாரம் தொடர்பான கூடுதல் விவரங்களை வழங்க மறுத்துவிட்டார்.


"இந்த நிகழ்வு மலையேறும்போது நடைபெற்ற விபத்து அல்லது பாதை நிலையின் விளைவாக இல்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும், இது மலையில் உள்ள வேறு எந்த அணிகளுக்கும் சாத்தியமான தாக்கம் அல்லது பாதுகாப்பு கவலையை ஏற்படுத்தும்" என்று சைமன்சன் நிறுவனத்தின் இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


ஜொனாதன் சுகர்மேன், எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சிப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, சுகர்மேன் எவரெஸ்ட் சிகரத்தின் 3வது முகாம் வரை சென்றிருந்தார் என்று AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பி.டி உஷா! முதலில் நான் ஒரு வீராங்கனை பிறகே நிர்வாகி


இமயமலைத் தொடரில் உள்ள எவரெஸ்ட் சிகரம், கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 30,000 அடி உயரத்தில் பூமியின் மிக உயரமான இடமாகும். இந்த ஆண்டு, நேபாளம் வெளிநாட்டு ஏறுபவர்களுக்கு 466 அனுமதிகளை வழங்கியுள்ளது. மலை ஏறும் பருவம் ஜூன் ஆரம்பம் வரை நீடிக்கும்.


இந்த சீசனில் எவரெஸ்ட் சிகரத்தில் நடந்த நான்காவது மரணம் இதுவாகும். கடந்த ஆண்டு, மே 12 அன்று, கும்பு பனிப்பாறையில் ஏற்பட்ட பனிச்சரிவில் மலை ஏறுபவர்களில் மூவர் இறந்தனர்.


உலகின் மிக உயரமான சிகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஐந்து ஏறுபவர்கள் இறக்கின்றனர் என்று AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் 2019 ஆம் ஆண்டில், 11 பேர் இறந்தனர், நான்கு இறப்புகள் நெரிசலால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  


போதுமான தயாரிப்பு இல்லாமை அதிகரித்து வரும் இறப்புகளுக்கு காரணம் என்று உள்ளூர் வழிகாட்டிகள் தெரிவித்தாலும், இமலமலைப் பனிப்பாறைகளில் விரிசல்கள் விரிவடைவது, பனி சரிவுகளில் ஓடும் நீர் மற்றும் அதிக பனிப்பாறை ஏரி உருவாக்கம் ஆகியவை பற்றியும் மலையேறிகள் குறிப்பிட்டுள்ளதால், காலநிலை மாற்றம் அபாயங்களை அதிகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதை மறுக்கமுடியாது.


மேலும் படிக்க | பற்றி எரியும் மணிப்பூரைக் காப்பாற்றுங்கள்! பிரதமருக்கு கோரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ