டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு... குண்டு பாய்ந்ததில் காயம்... அலறிய மக்கள் - நடந்தது என்ன?
Donald Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவரை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் காயமடைந்தார்.
Donald Trump Latest News Updates: அமெரிக்க முன்னாள் அதிபரும், அடுத்த நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் (Amercian Presidential Election 2024) குடியரசுக் கட்சியின் வேட்பாளராக பார்க்கப்படும் டொனால்டு டிரம்ப் (Donald Trump) மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட குண்டுகள் சுடப்பட்டன.
அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாகாணத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் தோட்டா அவரது காதில் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் தற்போது நலமாக உள்ளார் எனவும், காதில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீடீர் தாக்குதல்
தொடர்ந்து, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பின் பேசிய டிரம்ப்,"துப்பாக்கித் தோட்டா துளைத்ததில் என் வலது காதின் மேல்பகுதியில் காயம் மேற்பட்டது" என தெரிவித்தார். மேலும்,"காற்றில் ஒரு சத்தம் கேட்டபோது ஏதோ தவறாக நடக்கப்போகிறது என நினைத்த உடனேயே, அந்த தோட்டா என்னை துளைத்துவிட்டுச் சென்றது" என்றார்.
மேலும் படிக்க | ISS-ஐ கடலில் தள்ளும் நாசா! களத்தில் இறங்கிய எலான் மஸ்க்
அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை அன்று மேற்கு பென்சில்வேனியா பகுதியில் நடைபெற்ற பொதுகூட்டம் தொடங்கிய ஏழு நிமிடங்களுக்கு இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த கூட்டத்தில் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டிருந்தனர், இந்த கூட்டமும் தொலைக்காட்சி சேனல்களில் நேரலையில் ஒளிபரப்பட்டு வந்தன.
டிரம்ப்பை காப்பாற்றிய சீக்ரெட் சர்வீஸ்
தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது போது, சீக்ரெட் சர்வீஸ் என்றழைக்கப்படும் பாதுகாப்பு வீரர்களால் டிரம்ப் பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் சென்றார். பாதுகாப்பு வீரர்களால் அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டத்தை நோக்கி டிரம்ப் கையை உயர்த்தி கோஷமிட்டார். பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட உடனே டிரம்ப் தனது ஷூவை எடுத்து தரும்படி கேட்டிருக்கிறார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பின் வெளியிட்ட அறிக்கையில்,"பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டின்போது, துரிதமாக செயல்பட்டு சிறப்பாக பணியாற்றிய அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ் மற்றும் அனைத்து சட்ட அமலாக்கத்துறைக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, அந்த கூட்டத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், படுகாயம் அடைந்தவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் நினைத்து மிகவும் வருந்துகிறேன்.
தலைவர்கள் கண்டனம்
இந்த நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது மிகப் பெரியது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார் என்பது இதுவரை தெரியவில்லை, தற்போது அவர் உயிரிழந்தும்விட்டார்" என குறிப்பிட்டிருக்கிறார். துப்பாக்கிச்சூடு நடந்தியவர் உள்பட இரண்டு பேர் இந்த கூட்டத்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய மற்றொருவரும் பாதுகாப்பு படையினரின் எதிர் தாக்குதலில் படுகாயம் அடைந்திருக்கிறார் என கூறப்படுகிறது.
தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் மீதான இந்த தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூட்டுக்கு தனது கடுமையான கண்டங்களை தெரிவித்திருக்கிறார். வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் களமிறங்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ