சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் நிறுவனங்கள்!

USA China Conflict : சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், வணிக உறவுகளை பராமரிப்பது கடினமானது, இது நீண்ட காலத்திற்கு தொடரலாம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 10, 2024, 11:17 AM IST
  • சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்கள்
  • பாதிக்கப்படும் தொழில் நிறுவனங்கள்
  • பல ஆண்டுகள் நீடிக்கப்போகும் பிரச்சனைகள்
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் நிறுவனங்கள்! title=

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே செமிகண்டக்டர் தொழில்நுட்பம் தொடர்பாக நடந்து வரும் சர்ச்சை இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடரலாம் என்று தெரிய வந்துள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ASML இன் CEO பதவியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற பீட்டர் வென்னிங்க் டச்சு வானொலி BNR க்கு அளித்த பேட்டியில், இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான இந்த மோதல் கொள்கைகளின் அடிப்படையிலானது என்று கூறும் அவர், இதுபோன்ற ஊகங்களின் அடிப்படை, உண்மைகள், ஆவணங்கள், புள்ளிவிவரங்கள் அல்லது தரவுகளின் இல்லை, கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுகின்றன என்று தெரிவித்தார்.  

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், வணிக உறவுகளை பராமரிப்பது கடினமானது என்று கூறும் ASML நிறுவனத்தின் முன்னாள் சி.ஈ.ஓ பீட்டர் வீனின்க், இந்த விவகாரத்தைப் பற்றி நீங்கள் உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம், ஆனால் நாங்கள் ஒரு நிறுவனம், அதன் வணிக கூட்டாளர்களின் நன்மைகளையும் கவனித்துத் தான் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

அதிகமாக சிப் வாங்கும் நாடுகள்

உலகில் சிப் தயாரிக்கும் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ASML முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 2018 முதல் புதிய தொழில்நுட்பத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதை அமெரிக்கா தடை செய்துள்ள நிலையில், அமெரிக்காவின் முடிவு ASML நிறுவனத்திற்கு சிக்கல்களை உருவாக்குகிறது. சிப் தயாரிக்கும் கருவிகளை இந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கும் நாடுகளில் தைவானுக்கு அடுத்தபடியாக சீனா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | கார் வாங்கினால் 3.5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி! ஹைபிரிட் காருக்கு சலுகை!

நிறுவனத்திற்கு சிக்கல்

அமெரிக்காவின் தடையை அடுத்து ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலையை சமாளிக்க யில் சமநிலையை பராமரிக்க வீனின்க் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். அமெரிக்காவின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக தனது குரலை உயர்த்தத் தொடங்கிய அவர், சீனாவில், இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளை தீர்க்க முயன்றார். ஆனால், இது சீனாவுடன் நட்பு பாராட்டும் முயற்சியாக அமெரிக்க அதிகாரிகள் நினைக்க வாய்ப்பளித்திருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் உண்மையில் வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள், ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களின் நன்மைகளை மட்டுமே நினைத்து தங்களது தொழிலுக்காகவே இந்த முயற்சிகளை மேற்கொண்டதாக ASML நிறுவனத்தின் முன்னாள் சி.ஈ.ஓ பீட்டர் வீனின்க் தெரிவித்தார். 

செமிகண்டக்டர் தொழில் நீண்ட காலத்திற்கு அழுத்தத்தைக் கொடுப்பதாக இருக்கும் என்று பீட்டர் வென்னிங்க் சொல்கிறார். அவர் கூறுவதன் ஒட்டுமொத்த பொருள் என்னவென்றால் சிப் தொழில் தொடர்பாக நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைகள் பல தசாப்தங்களுக்கு தொடரலாம். இது நிறுவனங்களுக்கு பிரச்சனையைக் கொடுக்கும்.

மேலும் படிக்க | இந்திய குடும்பங்களுக்கு ஏற்ற மின்சார கார் இது! டாடா மோட்டர்ஸின் கார்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News