அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் வீட்டில் FBI சோதனை நடத்தி வருகிறது. டெலாவேரில் உள்ள அவரது வீட்டில் தற்போது சோதனை நடத்தி வரும் எஃப்.பி.ஐ, இதற்கு முன்னதாக, ஜோ பிடனின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள பிடனின் வில்மிங்டன் குடியிருப்பு மற்றும் திங்க் டேங்க் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த சோதனைகளின்போது வகைப்படுத்தப்பட்ட அடையாளங்களுடன் கூடிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (Federal Bureau of Investigation), அமெரிக்க ஜோ பிடனின் டெலாவேரில் உள்ள கடற்கரை வீட்டில் இன்று (2023 பிப்ரவரி 1, புதன்கிழமை ) சோதனை நடத்தியது. இந்த அதிரடி சோதனைகளில் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மேலும் படிக்க | H1B விசா விண்ணப்பம் லேட்டஸ்ட் அறிவிப்பு! மகிழ்ச்சியில் இந்திய ஐடி துறையினர்


NBC நியூஸ் வெளியிட்ட செய்திகளை மேற்கோள்காட்டி, தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைகள் தொடர்பாக பிடனின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சோதனைக்கு அமெரிக்க அதிபரின் "முழு ஆதரவு" உள்ளதாக  கூறப்பட்டுள்ளது.  


முன்னதாக, கடந்த நவம்பரில் வாஷிங்டன் டிசியில் உள்ள பிடனின் வில்மிங்டன் இல்லம் மற்றும் திங்க் டேங்க் அலுவலகத்தில் ரகசிய அடையாளங்களுடன் கூடிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், 2022 நவம்பர் நடுப்பகுதியில் தூதரகம் மற்றும் உலகளாவிய ஈடுபாட்டிற்கான பென் பிடென் மையத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன என்று NBC செய்தி நேற்று ( ஜனவரி 31, 2023) செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | பொது வெளியில் நடனமாடிய ஈரானிய இளம் தம்பதியினருக்கு 10 ஆண்டுகள் சிறை!


அமெரிக்க அதிபர் ஜோ பிடன், 2009-2016 ஆம் ஆண்டுகளில் நாட்டின் துணை அதிபராகவும் இருந்தபோது, அன்றைய அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தின் பல முக்கிய ஆவணங்களை தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. உக்ரைன், சீனா, ஈரான் நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் மிக முக்கியமான ஆவணங்களை ஜோ பிடன் தமது வீட்டில் வைத்திருந்ததாக கூறப்பட்டது.


அதோடு, ஈரானின் ஏவுகணை திட்டம், சீனாவின் உளவுத்துறை கட்டமைப்பு தொடர்பான ஆவணங்ளும் ஜோ பிடன் தனது வீட்டில் வைத்திருந்ததாக வெளியான தகவல்கள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இந்தப் புகார்கள் உச்சகட்டத்தை அடைந்த நிலையில், அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எஃப்.பி.ஐ., அதிபர் ஜோ பிடனின் வீட்டில் சோதனை நடத்தியது. அதில் முக்கியமான ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று மீண்டு்ம் ஜோ பிடனின் மற்றொரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | Transit Visa: ஸ்டாப் ஓவர்களில் பயணிப்பவர்களுக்காக சவூதியின் இ-ட்ரான்ஸிட் விசா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ