நியூடெல்லி: ஸ்டாப் ஓவர்களில் பயணிப்பவர்களின் வசதிக்காக, இ-ட்ரான்ஸிட் விசாவை சவூதி அரேபியா அறிமுகப்படுத்தியுள்ளது. இரு நாட்களுக்கு முன் அமலுக்கு வந்த இந்த சேவை வெளிநாடுவாழ் இந்தியர்கள் உட்பட இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பலனளிக்கிறது. இந்த டிரான்ஸிட் விசா சேவை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரும் மற்றும் சவுதியா ஏர்லைன்ஸ் மற்றும் ஃப்ளைனாஸ் ஆகிய மின்னணு தளங்கள் மூலம் பயணிகள், இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். இந்த விசா, நாட்டில் நிறுத்தப்படும் பயணிகள் நுழைவு விசாவைப் பெற அனுமதிக்கும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.
உம்ரா என்ற புனிதக் கடமையை செய்வ்தற்காக, இஸ்லாமியர்களின் புனித நகரான மதீனாவில் உள்ள நபிகள் நாயகத்தின் மசூதிக்குச் செல்வதற்கும், நாட்டை சுற்றிப் பார்க்க விரும்பும் பயணிகளுக்கும் பலனளிக்கக்கூட்டிய இந்த ஸ்டாப் ஓவர்களுக்கான டிரான்சிட் விசா, சவூதி அரேபியாவிற்குள் பயணிகள் நுழைவதற்கு அனுமதியளிக்கிறது.
இந்த விசா பெற்றவர்கள், சவூதியில் 96 மணி நேரம் தங்குவதற்கு அனுமதி கொடுக்கிறது. இந்த விசாவை செளதி அரேபியா அறிமுகப்படுத்தியதற்கு காரணம், இந்த நடவடிக்கை சவுதியின் வரலாற்று, கலாச்சார மற்றும் ஆன்மீக தளங்களை பார்க்க அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதே ஆகும்.
மேலும் படிக்க | இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்! தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!
இந்த விசா இலவசமானது, பயணிகளின் டிக்கெட்டுடன் இணைந்திருக்கும். பயணி, சவுதியில் நான்கு நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கும் இந்த அனுமதி, வழங்கப்பட்டதில் இருந்து அடுத்த மூன்று மாத செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது..
விசா விண்ணப்பம் தானாகவே ஒருங்கிணைந்த தேசிய விசா தளத்திற்கு அனுப்பப்படும் என்றும் டிஜிட்டல் விசா உடனடியாக வழங்கப்பட்டு பயனாளிக்கு மின்னஞ்சல் மூலம் திருப்பி அனுப்பப்படும் என்று இந்து தொடர்பாக சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
இ-டிரான்சிட் விசாவானது, சவூதியின் விஷன் 2030க்கு இணங்க, கண்டங்களுக்கு இடையேயான இணைப்பாகவும், ஆண்டுதோறும் 100 மில்லியன் மக்கள், நாட்டிற்கு வருவதையும் இலக்காக கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்டாப்ஓவர் விசாவானது, சுற்றுலாத் துறையில் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்பு வளர்ச்சிக்கு சவுதியின் அர்ப்பணிப்புக்கான மற்றொரு சான்றாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த விசா தொடர்பான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டது. மார்ச் 1 முதல் H1B விசா விண்ணப்பங்களை பெறத் தொடங்குவதாக வெளியான தகவல்கள், நீண்ட நாட்களாக இந்த வாய்ப்புக்காக காத்திருக்கும் பலருக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
மேலும் படிக்க | பட்ஜெட்டுக்கு பிறகு, இந்த 35 பொருட்களின் விலை அதிகரிக்கலாம்! தயாராகும் மோடி அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ