அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இறைச்சி விற்பனை சார்ந்த நிறுவனத்தின் தலைமை பதவியில் இருக்கும் ஒருவர், நேற்று முன்தினம் (நவ. 6) இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டைசன் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியும், அந்த நிறுவனத்தின் நிறுவனரின் கொள்ளுப்பேரனுமான ஜான் ஆர் டைசன் குடிபோதையில், ஒரு பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கைதுசெய்யப்பட்டார். 


கடந்த ஞாயிறு அன்று அதிகாலையில், ஃபயெட்டெவில்லே போலீசாருக்கு அவசர அழைப்பின்கீழ் புகார் ஒன்று வந்துள்ளது. ஆர்கன்சாஸ் பகுதியில் இருக்கும் பெண் ஒருவர், தன்னுடைய படுக்கையில் யார் என்ற தெரியாத நபர், ஆடையின்றி தன்னருகில் படுத்திருப்பதாக போலீசாரிடம் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | தொடர்ந்து வலுக்கும் ஹிஜாப் போராட்டம்; 'குதிரை' படைகளை நிறுத்தியுள்ள ஈரான் அரசு!


உடனடியாக போலீசார் அங்கு வந்து, டைசனை தூக்கத்தில் இருந்து எழுப்பி உள்ளார். எழுந்துவுடன் அவரால் முதலில் பேசவே முடியவில்லை என கூறப்படுகிறது. அவரை மெத்தையில் இருந்து தூக்கி அருகில் அமரவைத்ததும் மீண்டும் அவர் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். பின்னர் அவர் மீது மது நாற்றம் அடித்துள்ளதை தொடர்ந்து, அவரை போலீசார் எழுப்பி வெளியே அழைத்து வந்துள்ளனர். ஆனால், அவரால் ஒழுங்காக நடக்கவே முடியவில்லை. இதையடுத்து, அவர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.


தொடர்ந்து, 415 அமெரிக்க டாலர் ஒப்பந்த பத்திரத்தை பிரமாணமாக சமர்பித்து காவலில் இருந்து வெளியே வந்துள்ளார். அவர் நீதிமன்றத்தில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி ஆஜாராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 


இது அவரின் தனிப்பட்ட வாழ்வு தொடர்பானது என்றும், இதுகுறித்து வேறு தகவல் அளிக்க முடியாது என டைசன் ஃபுட்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து, டைசன் அவர் நிறுவனத்தில் வெளியிட்ட மெமோவில்,"எனது தனிப்பட்ட மதிப்பு, நிறுவனத்தின் மதிப்பு மற்றும் டைசன் ஃபுட்ஸ் நிறுவனத்தில் நம் ஒருவருக்கொருவர் இடையே வைத்திருக்கும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றுக்கு முரணான எனது நடத்தைக்காக நான் வெட்கப்படுகிறேன். நான் ஒரு பெரிய தவறை செய்துவிட்டேன், மற்றவர்களுக்கு எனது செயல்களால் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை ஆழமாக சிந்திக்க வைத்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறாரா டொனால்ட் டிரம்ப்? சூசகத் தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ