உடலுறவில் இத்தனை பிரச்னைகளா... விந்தணு முதல் ஆணுறை வரை அலர்ஜி - மனம் திறந்த பெண்!
World Bizarre News: அமெரிக்க பெண் ஒருவர் தனக்கு இருக்கும் அரிய வகை உடல் பாதிப்பினால், உடலுறவு கொள்வதிலும், கர்ப்பமடைவதிலும் இருக்கும் சிரமங்கள் குறித்து பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.
World Bizarre News: ஒவ்வொருவருக்கு பல உடலில் பல ஒவ்வாமைகள் இருக்கும். பால் சார்ந்த பொருள்களை உண்பது, வேர்க்கடலை சாப்பிடுவது, தூசி, உப்புத் தண்ணீர் என ஒவ்வாமைகளுக்கு பல காரணிகள் இருக்கும். எனவே, ஒவ்வாமை சார்ந்த பரிசோதனையை இளம் வயதிலேயே மேற்கொள்வது அவசியம் என்கிறது மருத்துவ உலகம். உங்கள் உடலுக்கு எவையெவை ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பது நீங்கள் தெரிந்துவைத்திருப்பது அவசியமாகிறது. இந்த ஒவ்வாமைகளால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.
அந்த வகையில், தனது ஒவ்வாமையை அறிந்துகொண்ட அமெரிக்க பெண்மணியான அலிசன் டென்னிசன் என்பவர் தனது இல்லற வாழ்வில் சந்திக்கும் உடல் ரீதியான கஷ்டங்கள்கள் குறித்து பொதுவெளியில் இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார்த 34 வயதான அலிசன் டென்னிசனின் இந்த உடல் ரீதியான பாதிப்பு மிகவும் அரிய வகை எனவும் கூறப்படுகிறது.
160 ஒவ்வாமைகளை உள்ளடக்கிய விரிவான ஒவ்வாமை சோதனையை தனது 24 வயதில் மேற்கொண்ட அலிசன் டென்னிசன், அப்போதே Ehlers Danlos Syndrome என்ற நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த அரிய நோய் Seminal Plasma Hypersensitivity, அதாவது ஆணின் விந்தணுவில் உள்ள புரதங்கள் இவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதேதான், அலிசனுக்கு ஏற்பட்டுள்ளது. அலிசனுக்கு உடலுறவின் போது, விந்தணு உடன் தொடர்பு ஏற்படும்போது, தோலில் கடுமையாக எரிச்சல் ஏற்பட்டு கடுமையான வலியும் வரும் என தெரிவித்துள்ளார்.
விந்தணு மட்டுமல்ல ஆணுறையும் பிரச்னை
அவரின் உடற்பாதிப்பு குறித்து ஊடகம் ஒன்றில் பேசும்போது,"இது கடுமையான போராட்டம்தான். உடலுறவில் ஈடுபடுவது கடினமானது, ஏனென்றால் அது அசௌகரியத்தைதான் தரும். என்னால், ஆணுறையை கூட பயன்படுத்த முடியாது" என்றார். கடுமையான எரிச்சல் உடலுறவில் சிரமத்தை உண்டாக்கும் என்றும் இதனால் அலிசனின் இணையருக்கும் மிகவும் சிரமம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | மொபைல் லைட்டிலேயே கேன்சரை கண்டுபிடித்த தாய்... உயிர் தப்பிய மகன் - அது எப்படி?
விந்தணுவினால் தனக்கு வரும் கடுமையான பாதிப்பை தவிர்க்க ஆணுறையை அலிசன் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், அங்குதான் மீண்டும் அலிசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆணுறையை உருவாக்கப் பயன்படும் ஒரு பொருளும் அலிசனுக்கு ஒவ்வாமையாக இருந்துள்ளது. இத்தகைய பிரச்னையால் அலிசன் மற்றும் அவரின் இணையரால் குழந்தையை பெற்றெடுத்து ஒரு குடும்பத்தை உருவாக்க பெரும் பிரச்னை இருப்பதாகவும் கூறுகின்றனர்.
குடும்பமாக வாழ ஆசை...
விந்தணுவை ஒட்டுமொத்தமாகவே நிராகரிக்கும் தனது உடல் மூலம் எப்படி குழந்தையை பெற்றெடுப்பது என அலிசனுக்கு கடும் உளச்சலும் இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, ரத்த உறைவு பாதிப்பும் அவருக்கு இருப்பதால் கர்ப்பமடைவது என்பது கூடுதல் பிரச்னையாகி உள்ளதாகவும் அலிசன் தெரிவித்துள்ளார்.
இத்தனை பிரச்னைகள் இருந்தும் அலிசன் மற்றும் அவரது கணவர், ஒரு குழந்தையை பெற்றெடுத்து குடும்பமாக வாழ வேண்டும் என்பதில் உறுதியான நேர்மறையான எண்ணத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அலசின் இதுகுறித்து கூறுகையில்,"என்னால் எப்படி குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பது எனக்கு தெரியவில்லை.
அதை எப்படி செய்வது என்றே எனக்கு புரியவில்லை. விந்தணுவை எனது உடல் 1% கூட ஏற்றுக்கொள்ளாதா என்ன?" என தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். 34 வயதான அலிசனுக்கு குழந்தையை பெற்றெடுத்து, ஒரு குடும்பமாக வாழும் எண்ணம் வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ