மொபைல் லைட்டிலேயே கேன்சரை கண்டுபிடித்த தாய்... உயிர் தப்பிய மகன் - அது எப்படி?

World Bizarre News: வெறும் மொபைல் ஃபிளாஷ் லைட்டை பயன்படுத்தி தனது மகனின் புற்றுநோயை கண்டுபிடித்து, சரியான நேரத்தில் சிகிச்சைக்கு அளித்த சென்ற தாயாரின் நெகிழ்ச்சி கதையை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 29, 2024, 01:31 PM IST
  • இச்சம்பவம் 2022ஆம் ஆண்டு நடந்தது.
  • தற்போது அந்த சிறுவனின் நோய் பூரணமாக குணமானது.
  • 6 முறை கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்.
மொபைல் லைட்டிலேயே கேன்சரை கண்டுபிடித்த தாய்... உயிர் தப்பிய மகன் - அது எப்படி? title=

World Bizarre News: இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரின் கில்லிங்ஹாம் பகுதியைச் சேர்ந்த சாரா ஹெட்ஜஸ். 40 வயதான சாரா, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு இரவில் அவரது வீட்டில் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அவர் மும்முரமாக சமைத்துக்கொண்டிருந்த போது, அவரின் கவனம் திடீரென அவரது 3 வயது மகனான தாமஸ் மீது சென்றுள்ளது. 

அந்த நேரத்தில், தாமஸின் கண்களில் பூனையின் கண்களில் காண்பது போன்ற திடீர் வெள்ளை நிற பளபளப்பு தெரிவது சாராவின் பார்வைக்கு தெரிந்துள்ளது. அந்த விசித்திரமான காட்சியை உறுதிசெய்ய சாரா தனது ஸ்மார்ட்போனின் ஃபிளாஷ் லைட்டில் தனது மகனின் கண்களை இன்னும் நெருக்கமாக பார்த்துள்ளார். 

வீட்டிலேயே பரிசோதனை

ஃபிளாஷ் லைட்டில் தான் பார்த்ததை கண்டு சாராவுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், மொபைலில் அதனை பல புகைப்படங்கள் எடுத்துள்ளார். தனது மகனின் கண்களில் தென்படுவது என்ன என்பது குறித்து உடனடியாக இணையத்தில் தேடி உள்ளார். கொஞ்சம் நேரம் கழித்து அதே கண்களை புகைப்படம் எடுத்தபோது, அந்த பளபளப்பு காணவில்லை. ஒருவேளை இது லைட்டினால் ஏற்பட்ட மாயையோ என அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. 

மேலும் படிக்க | அமெரிக்க அதிபர் போட்டியில் முந்துவாரா டிரம்ப்! ‘அமெரிக்க கேபிடல்’ ஏற்படுத்தும் எதிர்வினை!

எனவே, அதுகுறித்து உறுதி செய்ய அடுத்த நாளே, அவரது மகனை அனைவிதமான வெளிச்சங்களிலும் ஒவ்வொரு அறையிலும் புகைப்படம் எடுத்துள்ளார். அவரது சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், அந்த பளபளப்பு கண்களில் தெரிவது மீண்டும் உறுதியானது. இதுகுறித்து மீண்டும் இணையத்தில் தேடியுள்ளார். அப்போதுதான், அது புற்றுநோய் என அவருக்கு தெரியவந்தது. மேலும் இதனை உறுதிப்படுத்த மருத்துவரிடம் சென்றிருக்கிறார். மருத்துவரும் அது புற்றுநோய்தான் என்பதை உறுதிசெய்து, கூடுதல் சிகிச்சைக்காக மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கும்படி தெரிவித்துள்ளார். 

தாமஸின் கடினமான பயணம்

தாமஸிற்கு, retinoblastoma என்ற அரிய மற்றும் தீவிரமான கண் புற்றுநோய் ஆகும். சாரா அவரது மகன் குறித்து மிகவும் வேதனையடைந்தார். இருப்பினும், அப்போது தாமஸின் புற்றுநோய்க்கு எதிரான போர் தொடங்கியது. ஆறு முறை மிக மிக கடினமான கீமோதெரபி சிகிச்சைகளை மேற்கொண்டார். அதாவது, 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அந்த கதிரியக்க சிகிச்சையை மேற்கொண்டார். 

செப்சிஸ் நோய் உட்பட சில பின்விளைவுகளுக்கு மத்தியில், தாமஸ் பொறுமையாக அந்த சிகிச்சையை மேற்கொண்டார். குறிப்பாக, கடந்தாண்டு ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தனது இறுதி கீமோதெரபி சிகிச்சையை அவர் முடித்தார். கடந்தாண்டு மே மாதம் அவர் வெற்றிகரமாக சிகிச்சை ஒட்டுமொத்தமாக நிறைவுசெய்து புற்றுநோயில் இருந்து மீண்டார். 

தற்போது, தாமஸ் தனது உடன் பிறந்தவர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறார். முழுவதுமாக நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளார். நோயினால் தாமஸ் மட்டுமின்றி தாயார் சாராவும் மிகவும் அவதிப்பட்டார். இருப்பினும், நோய் முதல் அதில் மீண்டது வரையில் இந்த ஒட்டுமொத்த பயணத்தையும் சாரா நினைவுக்கூர்ந்தார். 

எதிர்காலத்திற்கான நம்பிக்கை

குறிப்பாக குழந்தை பருவ புற்றுநோய் அறிகுறிகள் குறித்தும் அதுசார்ந்த விழிப்புணர்வு குறித்த முக்கியத்துவத்தையும் சாரா பொதுவெளியில் பகிர்ந்துகொண்டார். மேலும், குழந்தை பருவ கண் புற்றுநோய் அறக்கட்டளை (CHECT) போன்ற நிறுவனங்கள் தாமஸின் கண்ணில் உள்ள வெள்ளைப் பளபளப்பு போன்ற நுட்பமான அறிகுறிகளை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை சுட்டுக்காட்டுகின்றன.

தாமஸ் நோய் குணமானதற்கு முக்கிய காரணமான, விரைவான சிகிச்சை மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையை கண்டறிந்தது எனலாம். தாமஸின் கதை நிச்சயம் பிரகாசமான, புற்றுநோய் இல்லாத எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது எனலாம். 

மேலும் படிக்க | சட்டவிரோத ஆயுத பரிமாற்றம் உலகிற்கே அச்சுறுத்தல்! ரஷ்யா & வடகொரியா மீது குற்றச்சாட்டு!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News