Conjoined Twins Abby Hensel Marriage : உலகம் முழுவதும் பிரபலமான இரட்டை சகோதரிகளாக இருப்பவர்கள், Abby Hensel. இவர்கள் ஒரே ஆளை திருமணம் செய்து கொண்ட விஷயம், தற்போது இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம்ம ஊருக்கு ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் கதை புதிதல்ல. இந்தியாவில் அப்படி இருப்பவர்களின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், அவர்கள் குறித்த வீடியோக்களும் அவர்களின் வாழ்க்கையில் என்னென்ன செய்கின்றனர் என்பதும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இவ்வளவு ஏன், சூர்யா நடித்த மாற்றான் திரைப்படம், பிரியாமணி நடித்த சாருலதா திரைப்படம் என படங்களில் கூட ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை வைத்து கதை எழுதியிருக்கின்றனர். படங்களில் காட்டுவது போல இல்லை என்றாலும், ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் வாழ்க்கை பிறரை விட கொஞ்சம் வித்தியாசமானதாகவே உள்ளது. அந்த வகையில், உலகப்புகழ் பெற்ற ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள், ஒரே ஆளை திருமணம் செய்து கொண்டுள்ளனர். 


ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள்..


அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள், Abby மற்றும் Brittany Hensel. இவர்கள், தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த நேர்காணல் மூலம் பிரபலமாக மாறினர். இவர்களுக்கு ஒரே உடலில் இரு தலை, இரு மூளை, இரு இதயம், நான்கு நுரையீரல்கள். ஆனால், ஒரே உடல். ஒருவர் வலது கையை கண்ட்ரோல் செய்ய, இன்னொருவர் இடது கையை கண்ட்ரோல் செய்கிறார். இவர்களை வைத்து 90களில் பல பக்கங்களுக்கு பத்திரிகை செய்திகள் வந்துள்ளன. இவர்கள், நடக்க தெரியாத வயதில் தவழ்வதி இருந்து. நடை பழகுவது, நீச்சல் பயிற்சி மேற்கொள்வது, சைக்கிள் ஓட்டுவது, கார் ஓட்டுவது என அனைத்தையும் ஒன்றாகவே செய்ய வேண்டிய நிலை உள்ளது. 


இவர்கள்,  2013ஆம் ஆண்டு முதல், மின்னெசோடா என்ற அமெரிக்க மாகாணத்தில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அது மட்டுமன்றி, தனியே ஒரு டிவி சீரிஸையும் ஆரம்பித்தனர். இதன் மூலம், இவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆடியன்ஸ் கிடைத்தனர். 


மேலும் படிக்க | இந்தியர்களின் வயிற்றில் பால் வார்க்கும் கனடா பிரதமர்! இனி வாடகை பிரச்சனை இருக்காது!


திருமணம்..


சில நாட்களுக்கு முன்பு, இந்த ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் ஒருவருடன் திருமண உடையில் நடனமாடுவது போன்ற வீடியோ வைரலானது. இதையடுத்து இவர்களுக்கு திருமணம் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள், 2021ஆம் ஆண்டு ஜாஷ் பௌளிங் என்பவரை திருமணம் செய்துகொண்டதாகவும், இவர் ராணுவத்தில் பணிபுரியும் நர்ஸ் என்றும் கூறப்படுகிறது.



இதையடுத்து இவர்களின் பேஸ்புக் பக்கத்தை நோடமிட்ட நெட்டிசன்கள், தங்கள் திருமண புகைப்படத்தை அவர்கள் டிபியாக வைத்துள்ளதை பார்த்து அதையும் வைரலாக்கி வருகின்றனர். 


பிழைக்க முடியாது எனக்கூறிய மருத்துவர்கள்..


பாெதுவாக, இவ்வாறு ஒட்டிப்பிறக்கும் இரட்டைக்குழந்தைகளில் சிலர் மட்டுமே உயிர் வாழ்கின்றனர். அதிலும், ஒரு சிலர் மட்டுமே நீண்ட வருடங்கள் உயிர் வாழ்கின்றனர். Abby மற்றும் Brittany Hensel பிறக்கும் போது, இவர்கள் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், நல்ல முறையில் பிறந்து, வளர்ந்து நிற்கும் இந்த அதிசய பிறவிகளான ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளுக்கு தற்போது 34 வயதாகிறது. 


மேலும் படிக்க | ரத்தத்தை குடிக்கும் பெண்... அதுவும் தினமும் 1 லிட்டர்... இந்த பழக்கம் வந்தது எப்படி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ