இந்த வருடம் வசூலை வாரிக்குவித்த டாப் 10 படங்கள்! முதலிடத்தில் இருப்பது யார் படம் தெரியுமா?

Top 10 Movies of 2023: இந்த ஆண்டு, வெளிவந்த படங்களிலேயே அதிகம் வசூலித்த டாப் 10 இந்திய படங்களின் லிஸ்டை பார்க்கலாமா? 

2023 வருடம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இந்த வருடம், பல படங்கள் திரைக்கு வந்து வெற்றி பெற்றன. இவற்றில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்டை பார்க்கலாமா? 

1 /11

2023ஆம் ஆண்டு வெளியான படங்களில் எந்த படம் அதிக வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ முழு லிஸ்ட். 

2 /11

இந்த வருடம் வெளியாகி அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்டில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் 10வது இடத்தில் உள்ளது. இப்படம், ஜனவரி மாதம் வெளியானது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷ்யாம், சம்யுக்தா, சங்கீதா உள்ளிட்ட பலர் நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இப்படம் மொத்தமாக ரூ.295 கோடி வசூலித்துள்ளது. 

3 /11

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் வெளியானது. த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இப்படம், மொத்தமாக ரூ.348 கோடி வரை வசூல் செய்திருந்தது. 

4 /11

பாலிவுட் உலகில் வெளியான பல படங்கள் இந்த வருடம் ஹிட் அடித்துள்ளன. அப்படி, ஹிட் ஆன படங்களில் ஒன்று ராக்கி அவுர் ரானி கி ப்ரேம் கஹானி. ரன்வீர் சிங், ஆலியா பட் உள்ளிட்டோர் இந்த படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படம், 2023ஆம் ஆண்டு வெளியாகி அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்டில் 8வது இடத்தில் உள்ளது. இந்த திரைப்படம், மொத்தமாக ரூ.375 கோடி வரை கலெக்ட் செய்துள்ளது. 

5 /11

உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்த படங்களுள் ஒன்று, ஆதிபுருஷ். இதில், ‘பாகுபலி’ பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தை ஓம் ராவத் இயக்கியிருந்தார். இப்படம் மொத்தமாக ரூ.400 கோடி வரை கலெக்ட் செய்திருந்தது. இந்த வருடம் அதிக வசூல் செய்த படங்களின் லிச்இல் இப்படம் 7வது இடத்தில் உ ள்ளது. 

6 /11

சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த படம், டைகர் 3. இந்த படம் அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்டில் 6வது இடத்தில்  உள்ளது. இதுவரை, டைகர் 3 திரைப்படம் ரூ.475கோடி வரை கலெக்ட் செய்துள்ளது. 

7 /11

லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பலமாக பெற்றிருந்தது. 2023ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்டில் 5வது இடத்தில் லியோ திரைப்படம் உள்ளது. இப்படம், மொத்தமகா ரூ.598 கோடி வரை வசூலித்துள்ளது. 

8 /11

நெல்சன் திலீப்குமார்-ரஜினிகாந்த் முதன் முறையாக கூட்டணி வைத்துக்கொண்ட படம், ஜெயிலர். தமன்னா, சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், மோகன் லால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம், இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படங்களின் லிஸ்டில் 4வது இடத்தில் உள்ளது. இப்படம், மொத்தமாக ரூ.635 கோடி வரை வசூலித்துள்ளது. 

9 /11

கடார் 2 திரைப்படம் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியானது. இதில், சன்னி டியோல் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம், இந்திய அளவில் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டில் 3வது இடத்தில் உள்ளது. மொத்தமாக ரூ.650 கோடி வரை இந்த படம் வசூல் செய்துள்ளது. 

10 /11

ஷாருக்கானின் பதான் திரைப்படம் உலகளவில் ரூ.1,000 கோடி வரை வசூலித்திருந்தது. இதில், ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 2023ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்டில் பதான் 2வது இடத்தில் உள்ளது. 

11 /11

அட்லீ இயக்கத்தி ஷாருக்கான் நடித்திருந்த ஜவான் திரைப்படம் உலகளவில் ரசிகர்களின் அமோக வரவேற்பினை பெற்றது. 2023ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்டில் முதலிடத்தில் இப்படம்தான் உள்ளது. ஜவான் படம் மொத்தமாக ரூ.1,100 கோடி வரை வசூலித்திருந்தது.