மூத்த ராணுவ அதிகாரி மரணம்..! சவப்பெட்டியைச் சுமந்து சென்ற கிம் ஜாங் உன்
வடகொரியாவில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற அதிபர் கிம் ஜாங் உன், சவப்பெட்டியைச் சுமந்து சென்றார்.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. கடந்த 2 ஆண்டுகளாக தங்களது நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மறுத்து வந்த வடகொரியா, கடந்த 12-ம் தேதி நாட்டில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது.
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பும், சீனாவும் வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா ஏற்கவில்லை. அந்நாட்டு மக்கள் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மர்ம காய்ச்சல் பரவி வருவதாக வடகொரிய அரசு அறிவித்தது.
மேலும் படிக்க | மூன்றே நாளில் 8 லட்சம் பேருக்கு கொரோனா.. ஆபத்தான நிலையில் வடகொரியா
இன்னும் கொரோனா பாதிப்பு வடகொரியாவில் முடிவுக்கு வராத நிலையில், அந்நாட்டு மூத்த ராணுவ அதிகாரி ஹியோன் சோல்-ஹே உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற அதிபர் கிம் ஜாங் உன் ஹியோன் சோல்-ஹே-வின் சவப் பெட்டியையும் சுமந்து சென்றார்.
வடகொரியாவில் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜோங் இல்-லிற்குப் பிறகு ஹியோன் சோல்-ஹே முக்கியத்தலைவராக அறியப்பட்டவர் ஆவார். கிம் ஜாங் உன்னுடன் இணைந்து ஏராளமான ராணுவ அதிகாரிகள், ஹியோன் சோல்-ஹே உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR