சீன அதிபர் ஜி ஜின்பிங் படையினரிடம் சிறப்புரை... சீனா போருக்கு தயாராகிறதா...!!!
சீனா மூன்று நாடுகளுடன் தற்போது பிரச்சனை செய்து வருகிறது. ஜி ஜின்பிங் படையினரிடம் சிறப்புரை ஆற்றி வரும் நிலையில், சீனா போருக்குத் தயாராகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா மற்றும் தைவானுடனான மோதல்களுக்கு மத்தியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது படைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளார். அவர் தனது வீரர்களிடம் மரணத்திற்கு பயப்படக்கூடாது என்றும் போரை வெல்லத் தயாராக, தியானத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் போருக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இராணுவத் தளபதிகளை உரையாற்றும் போது சீன அதிபர் ஜின்பிங் (Chinese President Xi Jinping) , எதிரிகளை வெல்வதற்கான அனைத்து தந்திரங்களையும் முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார். தற்போது, அமெரிக்கா (America), தைவான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையில் பதற்றம் நிலவுகிறது.
ALSO READ | #DiaperDon: டிவிட்டரில் டிரெண்டாகும் டிரம்பின் tiny desk
சீனா போருக்கு தயாராகி வருகிறது என டெய்லி மெயிலின் அறிக்கை கூறுகிறது. கடந்த மாதம் ஜின்பிங் கடற்படை வீரர்களிடம், நீங்கள் உங்கள் முழு மனதையும் சக்தியையும் போருக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார். நீர், நிலம் மற்றும் வானத்தில் ஒவ்வொரு போர் நிலைமைக்கும் பி.எல்.ஏ, அதாவது சீன படை (PLA) தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இராணுவ பயிற்சியின் சீன படைகள் ஈடுபடுவதாக, சீன பத்திரிக்கை சின்ஹுவாவின் அறிக்கை கூறுகிறது. போரை வெல்வதற்கு பயிற்சி பலப்படுத்தப்பட வேண்டும் என்று ஜின்பிங் இராணுவத் தளபதிகளிடம் கூறினார். இராணுவப் பயிற்சி என்பது தொடர்ச்சியான விஷயம் என்றும் அது இராணுவத்தின் முக்கிய வேலை என்றும் அவர் கூறினார்.
போரின் போது மிகவும் திறமையாக நிலைமை கையாளப்படும் என்பதை நிரூபிக்கும் வகையில் படையினருக்கு உயர் மட்ட பயிற்சி அவசியம் என்று ஜின்பிங் கூறினார். மக்கள் விடுதலை இராணுவத்தை உலகத்தரம் வாய்ந்த போர் சக்தியாக மாற்றுவதே சீனாவின் குறிக்கோள் என்றும் சீன அதிபர் கூறினார்.
இவை அனைத்தும், சீனா போருக்கு தயாராகிறதோ என்ற கேள்வியை வலுவாக எழுப்புகிறது.
ALSO READ | ஸ்வீடனில் இரவில் ஊதா நிறமாகும் வானம்.. காரணம் என்ன..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR