அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் வந்ததிலிருந்து, நாம் கடைக்கு போகாமல் வீட்டில் இருந்த படியே பொருட்களை வாங்குகிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இந்த ஐரோப்பியாவை சேர்ந்த செல்வந்தர் ஒருவர், ஒரு படி மேலே சென்று WhatsApp மூலம் ஒரு தீவையே வாங்கி விட்டார்.


ஐரோப்பாவை சேர்ந்த அந்த செல்வந்தர், ஒரு தனியார் தீவை ரூ.47 கோடிக்கு வீடியோ கால் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வாங்கியுள்ளார்!


அந்த நபர் அந்த இடத்திற்கு செல்லாமலேயே  சொத்தை வாங்கிவிட்டார். அவருக்கு வந்த ஒரு வீடியோவில் இந்த தீவின் அழகை காண நேர்ந்தது.  அயர்லாந்தில் உள்ள இந்த தீவின் இயற்கை அழகு அவரை மிகவும் கவர்ந்தது. அதனால், வாட்ஸ்அப் மூலம்  இதை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


ALSO READ | வீடு தேடி வரும் மருத்துவமனை…. கொரோனாவிற்கு ஆப்பு வைக்கும் IIT …!!!


உலகின்  அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வரும் நிலையில், ​​ஐரோப்பாவின் ஒரு செல்வந்தர் ஒரு தீவை ரூ .47 கோடிக்கு வாங்கினார் என்ற செய்தி அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியது.


இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொடுத்த மாண்டேக் ரியல் எஸ்டேட்டின் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் பாலாஷேவ் கூறுகையில், “உரிமையாளர் இந்த தீவின்  இயற்கைக்காட்சியில் மயங்கி விட்டார். அவர் குறிப்பாக பிரிட்டிஷ் தீவுகளில்  உள்ள Horse Island என்னும் ஒரு தீவை மிகவும் விரும்பினார். தீவிற்கு செல்லாமல்,  அனைத்து இயற்கைக்காட்சிகளையும் அங்குள்ள வசதிகளையும் வீடியோ மூலம் பார்த்து அவர் இதை வாங்கியுள்ளார் ” என தெரிவித்தார்.


ஏழு வீடுகள் மற்றும் மூன்று கடற்கரைகள்  உள்ள அழகான தீவில், சொந்தமாக மின்சாரம், நீர் மற்றும் கழிவுநீருக்கான அமைப்புகள் ஆகியவை உள்ளன. ஹெலிபேட், ஜிம், டென்னிஸ் கோர்ட் போன்ற சகல வசதிகள் உள்ளன.


ALSO READ | Amazon, Walmart நிறுவனக்களுக்கு சவாலாக உருவெடுக்கும் Reliance …!!!


COVID-19 தொற்று பயம் காரணமாக அவர்  இங்கு இப்போது வர விரும்பவில்லை ”, என ரியல் எஸ்டேட் நிறுவன அதிகாரி மேலும் கூறினார்.


இந்த தீவு 19 ஆம் நூற்றாண்டில் ஒரு சிறிய அளவிலான தாமிர தொழிற்சாலை இருந்தது, தீவைச் சுற்றி சுரங்கங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.