ஜெர்மனியில் இனி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது ஜெர்மனி நாட்டு பிரதமராக ஏஞ்சலா மெர்கல் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நான்காவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கபட்டார். இவரின் பதவிகாலம் வரும் 2021 ஆம் ஆண்டு முடிவடையும். 


இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஜெர்மனி நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல், இனி நான் தேர்தலில் போட்டியிடுவதில்லை. கட்சியிலும் பதவிக்காக போட்டியிடமாட்டேன். இது தான் எனது இறுதியான பதவிகாலம் என்று கூறினார்.


2005-ஆம் ஆண்டு ஜெர்மனியின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்ற ஏஞ்சலா மெர்கல், தொடர்ந்து 13 ஆண்டுகளாக அப்பொறுப்பில் நீடிக்கிறார். அதேபோல கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவராக கடந்த 18 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.