வாஷிங்டன்: அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சி அமைந்த பின்னர் வெளிநாட்டவர்கள் மீதான இனபாகுபாடு அதிகரித்து வருகிறது. தற்போது அங்கு இந்தியர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய இன்ஜினீயர் சீனிவாஸ், கன்சாஸ் மாகாணத்தில் கடந்த 22-ம் தேதி மது விடுதி ஒன்றில் வைத்து, கடற்படை வீரர் ஆதம் புரிண்டனால் சுட்டுக்கொல்லப்பட்டார். 


இந்த சம்பவத்துக்கு அடுத்து நேற்று இந்திய தொழிலதிபர் ஹர்னிஷ் பட்டேல் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்திய தொழிலதிபர் ஹர்னிஷ் பட்டேல் படுகொலை செய்யப்பட்டது அமெரிக்க வாழ் இந்திய மக்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.


இந்நிலையில் வாஷிங்டன்னின் கெனட் சிட்டியில் 39 வயது சீக்கி மதத்தை சேர்ந்தவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. கெனட் சிட்டியில் வசித்து வரும் இவர் கடந்த வெள்ளிக் கிழமை அன்று காலையில் வாகனத்தை சுத்தம் செய்தபோது அவ்வழியாக வந்த ஒரு மர்மநபர் அவரிடம் மோதலில் ஈடுபட்டு துப்பாக்கியால் அவரை சுட்டார். இதில் சீக்கியரின் தோல்பட்டையில் காயம் ஏற்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர் தப்பிவிட்டார். 


இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இந்த குற்ற சம்பவம் தொடர்பாக கெனட் சிட்டி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்பிஐயின் உதவியையும் கெனட் போலீஸ் நாடிஉள்ளது என தெரிகிறது. “நாங்கள் முதல்கட்ட விசாரணையில் உள்ளோம்,” என கெனட் போலீஸ் கமாண்டர் தாமஸ் கூறிஉள்ளார். அமெரிக்காவில் தொடர்ச்சியாக இந்தியர்கள் மீது இனவெறி வன்முறையானது பிரயோகிக்கப்படுவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.