நவம்பர் 3 ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் அதிபர் தேர்தலில், வெற்றி பெற்ற ஜோ பிடனின் (Joe Biden)  குழு, டொனால்ட் டிரம்பிற்கு  (Donald Trump)  எதிரான ஜனநாயகக் கட்சியினரின் வெற்றியை அங்கீகரிக்க சட்டப் பாதையைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக, பொது சேவை நிர்வாகம் (General Service Administration - GSA) அதிபர் வேட்பாளரை அங்கீகரிக்கிறது. அந்த நிர்வாகம் தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது தெளிவாக அறிவிக்கும். இதன் மூலம் அதிகாரப் மாற்றம் தொடங்க முடியும். ஆனால் அங்கீகாரம் தாமதப்படுவதால், பிடனின் அதிகார பரிமாற்ற குழுவால் (Transition Team) மில்லியன் கணக்கான டாலர் அளவில் உள்ள நிதியைப் பயன்படுத்தவோ அல்லது புலனாய்வு அமைப்புகள் மற்றும் பிற துறைகளின் அதிகாரிகளை சந்திக்கவோ முடியவில்லை.


டொனால்ட் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்ததை ஒப்புக் கொள்ள இல்லை. வாக்களிப்பதில் பரவலான மோசடி நடந்ததாக அவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். முடிவுகளை சவால் செய்து வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளார்.


ஜிஎஸ்ஏ இதை எவ்வளவு காலம் நீட்டிக்காலாம் என்று சட்டம் தெளிவாகக் கூறவில்லை, ஆனால் அதிகார மாற்றம் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரிகள் ஜோ பைடன் (Joe Biden) தான் வெற்றி பெற்றுள்ளார் என  தெளிவாக உள்ளது என்றும் அவரது அங்கீகாரத்தை தாமதப்படுத்துவது நியாயமில்லை என்றும் கூறுகிறார்கள்.


ALSO READ | US Election 2020: ஜோ பிடனுக்கு வாழ்த்து சொல்லாமல் சீனா மவுனம் காப்பது ஏன்..!!!

மோசடி நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று நாடு முழுவதும் உள்ள தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர். அதே நேரத்தில், டிரம்பின் முயற்சிகள் எதுவும் வெற்றி பெறாது என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.


அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடனை ஜிஎஸ்ஏ (GSA) இன்னும் அங்கீகரிக்க வேண்டும் என்று இடைநிலை அதிகாரி கூறினார். அங்கீகாரம் வழங்கப்படாவிட்டால், குழு சட்ட நடவடிக்கை குறித்து பரிசீலிக்கும் என்றும் கூறினார். 'சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியம் மட்டுமே உள்ளது. எனினும் வேறு பல வழிகள் ஏதேனும் உள்ளதா என்பதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். என அதிகாரிகள் தெரிவித்தனர்.


அதிகார மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு, அது தொடர்பான ஆலோசனை வழங்குபவர்களுக்கு சம்பளம் கொடுக்க  நிதியை பயன்படுத்துவதற்கும், உளவு துறை அணுகுவதற்கும் ஜிஎஸ்ஏ அங்கீகாரம் தேவை.


ALSO READ | Joe Biden: கார் சேஸ்மேன் மகன் வெள்ளை மாளிகை வேந்தன் ஆன கதை...!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR