இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பொருளாதாரம் தற்போது கடும் சிக்கலில் உள்ளது. பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக்கொண்டே உள்ளது. டாலருக்கு நிகரான நாட்டின் கரன்சியும் பலவீனமடைந்து வருகிறது. அங்கு உணவு பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகின்றனர். நிதி பற்றாக்குறையால், பாகிஸ்தானில் விமான சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA)  பாகிஸ்தான் நிதி கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளதன் காரணமாக, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கான விமான போக்குவரத்து முடங்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதி முடக்கம்


குளோபல் ஏர்லைன் அசோசியேஷன் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில், ஏப்ரல் 2023 இல், விமான போக்குவரத்து துறைக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் 47 சதவீதம் வரை நிதி வழங்கவில்லை என கூறியுள்ளது. 2022 ஏப்ரல் மாதத்தில்,1.55 பில்லியன் டாலர் தொகை நிலுவையில் இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 2.27 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தவிர, வங்கதேசம், நைஜீரியா, அல்ஜீரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கும் இந்த எச்சரிக்கையை IATA வழங்கியுள்ளது.


நிதி வழங்க IATA தடை


IATA, "பாகிஸ்தான் உட்பட சில நாடுகளின் விமான நிறுவனங்கள், விமான போக்குவரத்து துறையின் வணிக நடவடிக்கைகளில் இருந்து வருவாயைத் திருப்பித் தர முடியாமல், நிலுவையில் உள்ள நிலையில், இந்த நாடுகளுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்க முடியாது" என எச்சரித்துள்ளது. விமானச் சங்கத்தின் பொது இயக்குநர் வில்லி வால்ஷ், பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கங்களை வலியுறுத்தியுள்ளார். பிரச்சனை தீர்ந்தால் தான் இதனால் விமானங்களின் போக்குவரத்து தொடர்ப்பை தொடர முடியும். பொருளாதார நடவடிக்கை மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கு, நிலுவையில் உள்ள தொகையை செலுத்துவது மிகவும் முக்கியமானது என்று அந்த அமைப்பு கூறுகிறது. நைஜீரியாவிற்கு $812.2 மில்லியன், பங்களாதேஷிற்கு $214.1 மில்லியன், அல்ஜீரியாவிற்கு $196.3 மில்லியன், பாகிஸ்தானுக்கு $188.2 மில்லியன் மற்றும் லெபனானுக்கு $141.2 மில்லியன் அளவிற்கு நிதி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக IATA மேலும் கூறியது.


வெளிநாட்டு நிறுவனங்களின் பிரச்சனைகள்


சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்த விதிகளுக்கு இணங்குமாறு பாகிஸ்தான் உட்பட மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளின் அரசாங்கங்களை விமானச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதைச் செய்வதன் மூலம் மட்டுமே, டிக்கெட்டுகள், சரக்கு இடம் மற்றும் பிற செயல்பாடுகளின் விற்பனையிலிருந்து பெறப்பட்ட இந்த நிதியைத் திருப்பித் தர விமான நிறுவனங்களை இயக்க முடியும் என்று அது கூறுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம், பாகிஸ்தானில் தொடரும் நடவடிக்கைகள் "மிகவும் சவாலானதாக" மாறிவிட்டதாக அந்த அமைப்பு எச்சரித்தது. டாலரை திரும்பப் பெறுவதற்கு விமான நிறுவனங்கள் போராடி வருவதாக அவர் கூறுகிறார். இதனால் அந்நாட்டில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சிரமம் அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | OIL CUT: சவுதி அரேபியாவின் முடிவால் கச்சா எண்ணெய் விலை உயர்வு! இதன் எதிரொலி என்ன?


பாகிஸ்தானுக்கு கடினமான சூழ்நிலை


பாகிஸ்தான் தற்போது பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கரன்சியை இறக்குமதி செய்வதில் அல்லது அதை மாற்றுவதில் நிறுவனங்கள் தாமதம் செய்கின்றன. நாடு இப்போது திவால் நிலையின் விளிம்பில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானில் நிலவும் சூழல் காரணமாக விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனங்கள் உள்ளூர் நாணயத்தில் டிக்கெட்டுகளை விற்கின்றன, ஆனால் எரிபொருள் போன்ற செலவுகளுக்கு டாலர்கள் தேவை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு நிலைமை மேலும் கடினமாகிவிட்டது.


பொருளாதார நெருக்கடி 


பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத மிக ஏழ்மையான நிலையில் தற்போது பாகிஸ்தான் உள்ளது. மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளுக்கு கூட அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மக்களின் அத்தியாவசிய தேவைகளான கோதுமை மாவு, பருப்பு வகைகள் மற்றும் எரிபொருளின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.


மேலும் படிக்க | ஆணாதிக்க தாலிபன்களின் விஷ முகம்! 1-6 வகுப்பு மாணவிகளுக்கு நஞ்சு கொடுத்த பள்ளிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ