காபூல்: படித்ததற்கு தண்டனை! ஆப்கானிஸ்தானில் 1-6 ஆம் வகுப்பு படிக்கும் 80 பள்ளிச் சிறுமிகள் விஷம் கொடுக்கப்பட்டுள்ள செய்தி உலகையே உலுக்குகிறது. படித்துவிட்டு முன்னேற வேண்டும் என்ற ஆசை யாருக்கு இருக்காது. ஆனால் நமது அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் படிக்க விரும்பிய சுமார் 80 சிறுமிகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
படிப்பதற்கு தண்டனை?
ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றியபோது, அங்குள்ள பெண்களின் நிலை குறித்த கவலை அனைவருக்கும் ஏற்பட்டது. அந்தக் கவலைகள், வெற்றுக் கவலைகள் இல்லை, உண்மையானது என தாலிபன்கள் அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 80 சிறுமிகளுக்கு விஷம் கொடுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. படிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவிகளுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடைத்திருக்கிறது என்பது அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இரண்டு பள்ளிகளில்ல் 80 மாணவிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சங்சரக் மாவட்ட பள்ளிகள்
வடக்கு ஆப்கானிஸ்தானின் சார்-இ-புல் மாகாணத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சங்சரக் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றதாக மாகாண கல்வித்துறை பணிப்பாளர் மொஹமட் ரஹ்மானி தெரிவித்துள்ளார். விஷம் குடித்த பெண்கள் அனைவரும் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் சிறுமிகள் என்று அவர் கூறியதாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அடையாளம் காண்பது? ரயில்வே தகவல்
விஷம் குடித்த சிறுமிகளில் 60 மாணவிகள் நஸ்வான்-இ-காபாத் அப் பள்ளியில் படிப்பவர்கள், 17 பெண்கள் நஸ்வான்-இ-ஃபைசாபாத் பள்ளியைச் சேர்ந்தவர்கள். இந்த இரண்டு ஆரம்பப் பள்ளிகளும் ஒன்றுக்கொன்று அருகில் இருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவிகள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் கல்வி அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. பரஸ்பர பொறாமை காரணமாக இந்த சம்பவத்தை யாரோ நடத்தியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பொறாமை காரணமாக மூன்றாவது நபர் மூலம் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சிறுமிகளுக்கு எப்படி விஷம் கொடுக்கப்பட்டது, அவர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள் என்பது குறித்து ரஹ்மானி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் முதன்முறையாக அரங்கேறியிருக்கிறது. தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரத்தைப் பறித்தது தவிர, அவர்களின் அனைத்து உரிமைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | விண்வெளியில் அமெரிக்காவை முந்தும் சீனா... தயாராகும் சீன விண்வெளி நிலையம்!
ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர முடியாது என்று அந்நாட்டு உயர்கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உடனடியாக அமலுக்கு வந்த இந்தத் தடை, அடுத்த உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்றும் தடை உத்தரவில் கூறப்ப்பட்டிருந்தது.
தாலிபன்கள் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தபின், மாணவர்கள் மற்றும் மாணவிகள் இடையே வகுப்பறையில் ஒன்றாகக் கல்வி கற்கத் தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே மேல்நிலைப் பள்ளிகள் மாணவிகளை சேர்த்துக்கொள்ள மறுக்கும் நிலையில், பெண்கள் முறைப்படுத்தப்பட்ட கல்வியைப் பெறுவதை அரசின் உத்தரவு தடுக்கிறது.
பல்கலைக் கழகங்களில் பெண்களின் பெரும்பாலான வேலைகள் ஒழிக்கப்பட்டு அவர்கள் வீட்டில் அனுப்பப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாக பொது இடத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் அண்டை நாடான ஈரானிலும் இதேபோன்ற வழக்கு முன்னுக்கு வந்தது. பள்ளி செல்லும் சிறுமிகள் குறிவைத்து விஷம் வைத்து கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான சிறுமிகள் விஷத்தின் மோசமான வாசனையால் நோய்வாய்ப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால் அதன் பின்னணியில் யார் என்ற விசாரணை நடந்ததாகவோ, தாக்குக்தலில் என்ன வகையான ரசாயனம் பயன்படுத்தப்பட்டது என்பது கூட தெரிவிக்கப்படவில்லை.
மேலும் படிக்க | பாலியல் தொழிலுக்காக பாகிஸ்தானிய பெண்களை 'இறக்குமதி' செய்யும் சீனா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ