வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இன்றைய இலங்கையில் நிலைக்கு, அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம் தாம் முக்கிய காரணம் என மக்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையையும், பிரதமர் இல்லத்தையும் சூரையாடியதைத் தொடர்ந்து,  கோத்தபய ராஜபக்ச சிறிது நாட்கள் தலைமறைவாக இருந்தார்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று  அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிரபார்க்கப்பட்ட நிலையில்,  கோட்டாபய ராஜபக்ஷ, தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை அதிகாலை நாட்டை விட்டு தப்பிச் சென்றார். 


அதே நேரத்தில் மாலத்தீவில் தஞ்சம் அடைந்து இருக்கும் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்தும், வெளியேற வலியுறுத்தியும் பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், மாலத் தீவு சரிப்படாது என  மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்நிலையில், இலங்கை தலைநகர் தற்போது போராட்டக்களமாக மாறி உள்ளது. கொழும்பு மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. இது அரசியல் எதிர்ப்புக் களமாக இல்லாமல், மக்களின் போராட்டக்களமாக, மக்களுக்கான களமாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களை அடக்குவதற்கு அனைத்துப் படைகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்களை கைது செய்வதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இலங்கையின் அதிகாரபூர்வ இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை தேர்வு செய்து நாடாளுமன்ற சபாநாயகர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் 15ஆம் தேதி நாடாளுமன்ற கூடுகிறது. இதைத் தொடர்ந்து 20ஆம் தேதி கூடும் எம்பிகள் கூட்டத்தில் புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | கொதி நிலையில் இலங்கை; தப்பி ஓடிய ராஜபக்ச; அடுத்த அதிபர் யார்?


கடந்த வெள்ளிக்கிழமை முதல் பொது வெளியில் காணப்படாத கோத்தபய ராஜபக்ச, ஐக்கிய அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் வகையில் புதன்கிழமை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அவரது மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லங்களை முற்றுகையிட்டதை அடுத்து, ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தார்.


கோத்தபய ராஜபக்சே இன்று ராஜினாமா செய்வதற்கு ஒப்புக் கொண்டு இருந்த நிலையில் மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில்தான் இன்று கொழும்புவில் போராட்டம் உக்ரமடைந்துள்ளது.


மேலும் படிக்க | எனக்கு இருந்தது ஒரே வீடு தான்... கண் கலங்கிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR