வடகிழக்கு அட்லாண்டாவில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் எட்டு பேர் உயிரிழந்தனர், குறைந்தது ஒருவர் காயமடைந்தார் என்று தகவல்கள் வந்துள்ளன. வடகிழக்கு நகரின் வடமேற்கில் செரோகி கவுண்டியில் அமைந்துள்ள இரண்டு மசாஜ் பார்லர்களில் இந்த துப்பாக்கி சூடுகள் நடைபெற்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழ்ந்த எட்டு பேரில் பலர் ஆசியாவை சேர்ந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தகக்து. ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  


செரோகி கவுண்டியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மசாஜ் பார்லரில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Also Read | Ind vs Eng 3rd T20I: ஷார்துல் தாகூர் ஃபீல்டிங்கில் மந்தமாக இருந்தது ஏன் - Virat Kohli


சிறிது நேரத்திற்குப் பிறகு, அட்லாண்டாவில் உள்ள மசாஜ் பார்லரில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. அட்லாண்டாவிலிருந்து வடமேற்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள செரோகி கவுண்டியில் நடந்த ஒரு தாக்குதலுக்கும், அட்லாண்டா துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் கருதவில்லை.


செரோகி கவுண்டியில் ஒரு எஸ்யூவி காரை ஓட்டிச் சென்ற சந்தேக நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.


Also Read | போதை ஏறினா ஏன் இங்கிலீஷ்ல பேசனும்? இதோ அறிவியல் காரணம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR