எருது சண்டையின் போது சரிந்து விழுந்த மேடை - 4 பேர் பலி
கொலம்பியாவில் எருது சண்டையின் போது மேடை சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கொலம்பியாவின் எஸ்பினல் நகரத்தில் கொரலேஜோ எனப்படும் பாரம்பரிய எருது சண்டை நடைபெற்றது. எருது சண்டையைப் பார்வையாளர்கள் கண்டு ரசிப்பதற்காக பல அடுக்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது.
மேடையில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் போட்டியை ரசித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மேடை சரிந்து விழுந்தது. இதில், 4 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த மேடை மூங்கிலால் அமைக்கப்பட்டிருந்ததாலே பாரம் தாங்காமல் சரிந்து விழுந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | கருக்கலைப்பு தடை; அமெரிக்க தெருக்களில் வலுக்கும் மக்கள் போராட்டம்
இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமானோர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற விளையாட்டுகள் ஆபத்தானவை என்பதோடு விலங்குகளைத் துன்புறுத்துவதை ஊக்குவிக்கிறது என்பதால் அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டுமென நடவடிக்கை எடுக்கப்படுமென டோலிமா மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Gold Import Ban: ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் ஜி7 நாடுகள்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR