பெய்ஜிங்: சீன அரசின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள சீன அலுவலக ஊழியர்கள் சமீபத்தில் நாட்டில் கடுமையாக இருக்கும் வேலை நேரங்கள் குறித்து `வர்கர் லைவ்ஸ் மேட்டர்’ (`worker lives matter`) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பிரச்சாரம் நாட்டில் உள்ள '996 பணி கலாச்சாரத்திற்கு' எதிரானது. இந்த கலாச்சாரத்தின் படி, மக்கள் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தைவான் (Taiwan) செய்தி தெரிவிக்கிறது.


இணையத்தில் பரப்பப்படும் ஓப்பநாக்சஸ் ஸ்ப்ரெட் ஷீட்டில் தங்கள் பணி நேர அட்டவணையைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரச்சாரம் ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. வியாழக்கிழமை வந்த புதுப்பித்தல்களின்படி, டென்சென்ட், அலிபாபா மற்றும் பைட் டான்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் 4,000 க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த ஸ்ப்ரெட்ஷீட்டில் பதிவிட்டுள்ளனர்.


ALSO READ: சீனாவைப் போல இந்தியாவிலும் மின்சார நெருக்கடி வருமா? நிலக்கரி இருப்பு குறைவு 


இதற்கிடையில், சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான பணி நேரங்களுக்கு எதிராக சீன மக்களிடமிருந்து பெரும் கிரோதமும் எதிர்ப்பும் வெளிப்பட்டுள்ளதாக தைவான் செய்தி தெரிவிக்கிறது. இந்த 996 கலாச்சாரம், ஜேக் மா (Jack Ma) உட்பட சீனாவின் பல தொழில்நுட்ப நிறுவன தலைவர்களால் வெளிப்படையாக பாராட்டப்பட்டுள்ளது. “996 வேலை செய்வது மிகப்பெரிய பேரின்பம்" என்று ஜேக் மா ஒரு முறை கூறினார்.


ஆனால் சீன மக்கள், குறிப்பாக இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சமநிலை கொண்ட வாழ்க்கை-பணி முறையை மக்கள் விரும்புகிறார்கள் என்று தைவான் செய்தி தெரிவிக்கிறது.


இதைத் தவிர, சீன (China) தொழில்நுட்ப நிறுவனங்களும் அன்றாட அலுவலக வாழ்க்கையில் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் கருவிகளைக் (productivity-enhancing tools ) கொண்டு வர முயற்சிக்கின்றன. பணியாளரின் செயல்திறன் மென்பொருள் சார்ந்த கண்காணிப்பு மேலாண்மை மற்றும் அவர்களின் தொழில்முறை வாழ்க்கையை கண்காணிப்பதன் மூலம் ஊழியர்களிடமிருந்து அதிக மதிப்பைப் பெறுகிறது.


இத்தகைய ஆக்ரோஷமான நடைமுறைகள் மற்றும் ஊழியர்களின் புகார்கள் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் உள்ள போதிலும், அவை முதலீட்டாளர் உணர்வில் சிறிதளவு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று நிக்கி ஆசியா தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் இன்னும் மிருகத்தனமான வேலை நேரங்களை செயல்படுத்த முயல்கின்றன. பைட் டான்ஸ் அதன் ஊழியர்களுக்கு இரு வாரத்திற்கு ஒரு முறைதான் முழுமையான வார இறுதி விடுமுறையை அளிக்கின்றது. பிந்துஓடுவோவின் (Pinduoduo) புதிய பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் மாதத்திற்கு குறைந்தது 300 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.


ALSO READ: விண்வெளியில் திரைப்பட ஷூட்டிங்; வெற்றிகரமாக திரும்பும் படக் குழு..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR