Australia PM Anthony Albanese: காதலர் தினம் உலகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏற்கெனவே மணம் முடித்த தம்பதிகள் தங்களின் இணையர் மீதான காதல் இன்னும் தீர்ந்துவிடவில்லை என்பதை நிரூபிக்க இந்த தினத்தை கொண்டாடியிருப்பார்கள், காதல் உறவில் இருப்பவர்கள் தங்களின் காதலை இன்னும் அழுத்தமாக கொண்டாடிக்கொள்ள இந்த காதலர் தினத்தை பயன்படுத்தியிருப்பார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்னும் காதல் உறவில் இல்லாதவர்கள் தங்களின் மனதிற்கு பிடித்தவர்களிடம் காதலை கூறியிருப்பார்கள் அல்லது தங்களுக்கு ஏற்ற ஜோடியை நேற்றும் தேடிக்கொண்டிருந்திருப்பார்கள். எவ்வாறாயினும் காதலர் தினத்தில் எல்லோரும் ஒரு தீர்மானத்தை எடுத்திருப்பீர்கள் என்பது உறுதி. அந்த வகையில், காதலர் தினத்தில் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமரும் தனது காதலியிடம் காதலை தெரிவித்திருத்த சம்பவத்தை இங்கே காணலாம். 


சமூக வலைதளங்களில் செல்ஃபி


பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், காதலர் தினமான நேற்று அவரின் காதலி, ஜோடி ஹெய்டனிடம் (Jodie Haydon) தனது காதலை தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது காதல் உறுதியானது குறித்து ஆண்டனி அல்பனீஸ் தனது சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். 



மேலும் படிக்க | அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!


அவரது சமூக வலைதள பதிவில்,"அவள் சரி என்று சொல்லிவிட்டாள்" என அவரது இணையருடன் உடன் எடுத்த செல்ஃபியையும் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் ஹெய்டனின் கை விரலில் இருந்த மோதிரம், அவர்களின் நிச்சய மோதிரம் என தெரிவிக்கப்படுகிறது. ஹெய்டன் பல ஆண்டுகளாக ஓய்வூதிய நிதி துறையில் பணியாற்றியுள்ளார். 


வாழ்த்துக்களுக்கு நன்றி


மேலும் ஊடகம் ஒன்றில் நேற்று பேசிய அவர்,"எங்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நண்பர்கள் முதல் குடும்பம் வரை எங்களுக்கே யார் என்று தெரியாத மக்களும் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். 


2020ஆம் ஆண்டில், மெல்போர்ன் நகரில் நடந்த ஒரு நிகழ்வில் பிரதமர் ஆண்டனியும், அவரது காதலி ஹெய்டனும் முதன்முதலில் சந்தித்துள்ளனர். மேலும், பிரதமர் ஆண்டனியை கடுமையாக எப்போதும் விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன், ஆண்டனி மற்றும் ஹெய்டன் ஆகியோருக்கு நாடாளுமன்றத்திலேயே தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.



"இந்த திருமணத்திற்கு அழைப்பிதழைப் பெறுவுடன், பிரதமரே திருமணத்தின் உங்கள் முன் ரோஜாக்களை எறிந்துவிட்டு நான் அங்கே இருப்பேன்" என்று அவர் கூறினார். பிரதமர் ஆண்டனோயின் அமைச்சரவை சகாக்களும் சமூக வலைதளங்களில் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


மேலும் படிக்க | பேரன் பேத்திகளே இல்லாத நகரமா மாறப்போகும் உலகின் முதல் நகரம் எது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ