பேரன் பேத்திகளே இல்லாத நகரமா மாறப்போகும் உலகின் முதல் நகரம் எது?

Home Loan: சிட்னியில் அதிகரித்து வீட்டு வாடகையும், சொந்த வீடு வாங்க முடியாத அளவு விலை அதிகரிப்பும், இளைஞர்களை குடும்பத்துடன் வெளியேறச் செய்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 14, 2024, 12:03 AM IST
  • கடந்த காலத்தைப் பாதுகாப்பது அவசியமா?
  • எதிர்காலத்தை உருவாக்குவது முக்கியமா?
  • விவாதங்களை ஏற்படுத்தும் வீட்டு விலைவாசி
பேரன் பேத்திகளே இல்லாத நகரமா மாறப்போகும் உலகின் முதல் நகரம் எது?

சிட்னியில் 2016 மற்றும் 2021 க்கு இடையில 30 முதல் 40 வயதுடையவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இதற்கு காரணம், வீட்டு செலவுகளை கட்டுப்படுத்த முடியாதது தான் என்பது அதிர்ச்சியளிக்கிறது. நியூ சவுத் வேல்ஸ் உற்பத்தித்திறன் கமிஷன் அறிக்கை இந்தத் தகவலை  உறுதிபடுத்துகிறது. இன்று (பிப்ரவரி 13, செவ்வாய்) ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான சிட்னி "பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக" இருக்கும் என்று எச்சரித்தது,

Add Zee News as a Preferred Source

அதிகரித்து வீட்டு வாடகையும், சொந்த வீடு வாங்க முடியாத அளவு விலை அதிகரிப்பும், இளைஞர்களை குடும்பத்துடன் வெளியேறச் செய்கிறது. கமிஷன் நடத்திய ஆய்வில், சிட்னி 2016 மற்றும் 2021 க்கு இடையில் 30 முதல் 40 வயதுடையவர்களின் எண்ணிக்கை, இருமடங்கு குறைந்துள்ளது.

அதிக வீடுகளைக் கட்டுவதன் அவசியத்தைச் சுட்டிகாட்டும் அறிக்கையில் சிட்னி எதிர்கொள்ளும் மோசமான சூழ்நிலை விளக்கப்பட்டுள்ளது. பல இளம் குடும்பங்கள் சிட்னியை விட்டு வெளியேறுகின்றன, ஏனென்றால் வீடு வாங்குவது என்பது சிட்னியில் சாதாரணமான வேலையல்ல. அதிக வாடகை கொடுக்க முடியாதது. தினசரி வேலைக்காக, நீண்ட தூரம் பயணிப்பது என, நகரத்தின் வீட்டு வாடகை மற்றும் வீட்டின் விலை மக்களை அச்சுறுத்துகிறது.

மேலும் படிக்க - ஓட்டப்பயிற்சி Vs நடைப்பயிற்சி: உடல் எடையை சீக்கிரம் குறைக்க உதவுவது எது?

நீண்ட பயணத்தை தேர்ந்தெடுத்தால், புறநகர்ப் பகுதிகளில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பேரக்குழந்தைகள் இல்லாத நகரம் என்று சிட்னி மாறிவிடும் என்று எச்சரிக்கும் அறிக்கை, நகரம் முழுவதும் அதிக வீட்டு அடர்த்தி தேவை என்பதையும் எடுத்துரைத்தது.

சிட்னிக்கு லட்சக்கணக்கிலான புதிய வீடுகள் தேவை என்பதைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, உற்பத்தித்திறன் மற்றும் ஊதியங்களுக்கு உதவும்.

வீட்டுச் செலவுகள் அதிகமாக இருப்பது என்பது, பிற்போக்கு வரி போல இயங்குகின்றன, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இதன் சுமை அழுத்துகிறது.

ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, வலுவான மக்கள்தொகை வளர்ச்சி, மட்டுப்படுத்தப்பட்ட கட்டுமானம் மற்றும் கூட்டுக்குடும்பங்கள் குரைவது ஆகியவற்றால், சிட்னியின் வீட்டு விலை மர்றும் வாடகை மிகவும் அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்ல, உலகிலேயே அதிக விலையில் வீடுகள் விற்கும் நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியாவும் அறியப்படுகிறது.

மேலும் படிக்க - அசிங்கமான தொப்பை கொழுப்பை அசால்டாய் குறைக்க மஞ்சள் ஒன்று போதும்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நிகர வருகையுடன் குடியேற்றத்தில் மீள் எழுச்சி இருப்பதாகக் கூறப்படுவதால், நிலைமை மோசமடையக்கூடும்.

இருப்பினும், சிட்னியில் உள்ள உயர் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு இருப்பதால், பிரச்சனை தீவிரமடைந்துள்ளதாக தெரிகிறது.

2017 மற்றும் 2022 க்கு இடையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் ஏழு மாடிகளுக்குப் பதிலாக சராசரியாக 10 மாடிகள் கொண்டிருந்திருந்தால், கூடுதல் நிலம் தேவையில்லாமல் 45,000 கூடுதல் வீடுகள் சிட்னிக்கு கிடைத்திருக்கும்.
 
எனவே, சிடினியில் தற்போது தனி வீடுகளை விட, அபார்ட்மெண்ட் தான் நல்லது என்ற நிலை உருவாகியுள்ளது. 

கடந்த காலத்தைப் பாதுகாப்பதா அல்லது எதிர்காலத்தை உருவாக்குவதா?
மத்திய வணிக மாவட்டத்திற்கு அருகில் உள்ள வீடுகள் மீதான பாரம்பரிய கட்டுப்பாடுகள் மற்றும் அதிகமான வீட்டு வாடகை என்பது விவாதத்திற்கு உரியதாக இருக்கிறது.

 மேலும் படிக்க | தனியார் நிறுவனம் தோண்டிய 15 அடி குழி: 5 வீடுகளில் விரிசல், சுவர் இடிந்து விபத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

pple Link: https://apple.co/3yEataJ 

Trending News