பார்சிலோனா தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட 17 வயதான மௌசா ஓகபீர், கடலோர நகரமான கேம்ப்ரிஸில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அதிகாரிகள் நேற்று இரவு உறுதிப்படுத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில், திடீரென்று பொதுமக்கள் மீது பயங்கர வேகத்தில் சுமார் 106 கி.மீட்டரில் வந்த கார் மோதியதில்(இரண்டு முறை) சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.


முதல் சம்பவத்தில், மிக பிரபலமான தெருவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலி 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


முதல் சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்குப் பின், மற்றொரு கார் கேம்பிரில்களின் ஸ்பானிஷ் கடலோர ரிசார்ட்டில் மக்கள் மீது மோதியது. இந்த இரண்டாவது தாக்குதலில் பொதுமக்கள் 6 பெரும், ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்தனர்.


இந்த தாக்குதலுக்கு சம்மந்தப்பட்டவராக 17 வயதான மௌசா ஓகபீர் சந்தேகிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இவர் நேற்று இரவு கேம்ப்ரிஸில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என உறுதியானது.