விடுமுறையில் பொதுவாக பெரும்பாலானோர் எங்கு செல்ல விரும்புவார்கள்? பெரும்பாலான மக்களின் விருப்பம் கடல் கரையோ அல்லது அழகான தீவோ தான். ஆனால் சற்று யோசித்துப் பாருங்கள். உங்களுக்கென்று அழகான ஒரு சொந்த தீவு இருந்தால், அங்கு செல்ல உங்களுக்கு எந்த காரணமும் தேவையில்லை. நினைத்தால் சென்று நன்றாக அனுபவிக்கலாம். ஸ்காட்லாந்தில் ஒரு  தீவையே சொந்தமாக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. அதிலும் நீங்கள் நம்ப முடியாத விலையில். ஸ்காட்லாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள தொலைதூர மற்றும் மக்கள் வசிக்காத தீவான பார்லோக்கோ விற்பனைக்கு உள்ளது. இதன் விலை $1,90,000 அதாவது சுமார் 1.5 கோடி ரூபாய் மட்டுமே.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பார்லோக்கோ தீவில் ஒரு பெரிய குளம் உள்ளது. இது குளிர்கால மாதங்களில் விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு நீரின் ஆதாரமாக செயல்படுகிறது. அங்கு ஒரு கூழாங்கல் கடற்கரை உள்ளது. குறைந்த ஆழம் கொண்ட இந்த கடலின் அலையில் நடந்து செல்லலாம் மற்றும் ஒரு படகும் நிறுத்தப்படலாம். தீவில் வீடுகளோ கட்டிடங்களோ இல்லை. இங்கிருந்து அருகிலுள்ள நகரத்திற்கு சுமார் ஒன்பது கி.மீ தூரம் உள்ளது மற்றும் அருகிலுள்ள ரயில் நிலையத்தை அடைய சாலை வழியாக ஒரு மணி நேரம் ஆகும்.


மேலும் படிக்க | விமானத்தில் ரகளை செய்த பயணி... குடிபோதையில் விமான பணிபெண்ணிற்கு முத்தமிட்ட 61 வயது நபர்!


லண்டனில் இருந்து 563 கி.மீ தொலைவில் உள்ள தீவு


தீவின் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கால்பிரைத் குழுமத்தின் ஆரோன் எட்கர் ஒரு அறிக்கையில், 'தனியார் ஸ்காட்டிஷ் தீவை சொந்தமாக வைத்திருப்பது மிகவும் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் தரக் கூடியது. இங்கே நீங்கள் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களில் இருந்து தப்பித்து, சுற்றியுள்ள சில அழகான காட்சிகளை அனுபவிக்க முடியும். இந்த தீவில் இருந்து லண்டனில்  இருந்து 563 கிமீ தொலைவில் உள்ளது என்றும் எடின்பர்க் 160 கிமீ தொலைவில் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


அரிய தாவரங்கள் மற்றும் பெரிய  பறவைகள்


பார்லோக்கோ தீவு சுமார் 25 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. கடல் வரை நீண்டிருக்கும் பசுமையான புல் மற்றும் பாறை குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. தீவில் சில சிறந்த இயற்கைக்காட்சிகள் மற்றும் சில பெரிய கடல் பறவைகள் உள்ளன. இந்த தீவு அனைத்து வகையான வனவிலங்குகளுக்கும் தாயகமாக உள்ளது. இந்த தீவுப் பாறை கடல் லாவெண்டர் மற்றும் மணம் கொண்ட ஆர்க்கிட் போன்ற அரிய தாவரங்களுக்கு தாயகமாகும். இந்தத் தீவில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்று ஏஜென்சி நம்புகிறது.


மேலும் படிக்க | உயிரிழந்த 2 மணி நேரத்தில் நடந்த வியப்பான சம்பவம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ