உலகமே கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும்போது, பழைய ஆபத்து ஒன்றின் புதிய வீரியம் வெளியாகி திகைப்பை ஏற்படுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகைபிடிக்கும் பழக்கம் உலகில் 1.1 மில்லியன் மக்களுக்கு இருப்பதாக வெளியாகும் தகவல்கள் கவலைகளை ஏற்படுத்துகின்றன.


2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட எட்டு மில்லியன் மக்கள் புகைபிடிப்பதால் உயிரிழந்ததாக புதிய ஆராய்ச்சி ஒன்று கண்டறிந்துள்ளது. 2019க்கு பிறகு கொரோனா பாதிப்பு வந்துவிட்டது.


Also Read | கொரோனாவை கட்டுப்படுத்துமா ஆந்திராவின் கத்திரிக்காய் சொட்டு மருந்து?


கடந்த ஒன்பது ஆண்டுகளில் கிட்டத்தட்ட 150 மில்லியன் பேர் புகைப்பிடிக்கத் துவங்கியுள்ளனர். இதில் இளைஞர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.


ஆய்வின் படி, 25 வயதிற்குள் இளைஞர்கள் புகைபிடிப்பதற்கு அடிமையாகி விடுகிறார்கள், இது இளம் தலைமுறையினருக்கு மிகப் பெரிய சாபக்கேடு.


கடந்த மூன்று தசாப்தங்களாக புகைபிடிக்கும் பழக்கம் பரவுவதில் குறைவு காணப்பட்டாலும், 20 நாடுகளில் ஆண்களுக்கும் 12 நாடுகளில் பெண்களுக்கும் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


Also Read | இந்துவின் உடலை எரிக்க அனுமதி தந்த கேரள Church, குவியும் பாராட்டு


ஆசிய கண்டத்தில் மூன்றில் ஒருவர் புகைப் பழக்கத்தை வைத்திருக்கின்றனர். இந்த கொடிய பழக்கத்தால் சீனா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு. இந்தியா, அதற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது. இந்தோனேசியா, ரஷ்யா, அமெரிக்கா, பங்களாதேஷ், ஜப்பான், துருக்கி, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.


இளம் வயதினரை இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து விலக்கி வைப்பதற்கான வழிகளை அரசாங்கங்கள் கொண்டு வருவது மிகவும் முக்கியமானது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். 20 முதல் 25 வயதிற்குள் இந்த பழக்கத்தை பழகாவிட்டால் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வுகள் கூறுகின்றன.


"இளைஞர்கள் தங்கள் 20 களின் நடுப்பகுதியில் புகைப் பழக்கம் இல்லாதவர்களாக இருப்பதை உறுதி செய்வது அடுத்த தலைமுறையினர் புகைபிடிக்கும் பழக்கத்தை தீவிரமாக குறைக்கும்" என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான Reitsma கூறுகிறார்.


Also Read | Corona Update: 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.86 லட்சம் பேருக்கு கோவிட் 


புகையிலை மற்றும் சிகரெட்டுகளை விளம்பரப்படுத்துவதற்கான தடையை ஆன்லைன் ஊடகங்களுக்கும் நீட்டிப்பது அவசியம் என்று அவர் கருதுகிறார் சுவையூட்டப்பட்ட சிகரெட்டுகள் (flavoured cigarette) மற்றும் இ-சிகரெட்டுகள் (e-cigarettes) போன்ற ஒத்த தயாரிப்புகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.  


"சில நாடுகளில் முன்னேற்றம் இருந்தபோதிலும், புகையிலை தொழில் (tobacco industry) மற்றும் அரசியல் காரணங்களால், உலகளாவிய புகையிலை கட்டுப்பாடு குறித்த அறிவுக்கும் செயலுக்கும் இடையில் ஒரு நீண்ட மற்றும் தொடர்ச்சியான இடைவெளி ஏற்பட்டுள்ளது" என்று ஆய்வின் இணை ஆசிரியர் வின் குப்தா கூறினார்.


"புகைப் பொருட்களுக்கான விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் மீதான தடைகள் இணைய அடிப்படையிலான ஊடகங்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். உலகிலேயே நான்கு நாடுகளில் ஒன்று மட்டும் தான், புகைப் பொருட்களுக்கான அனைத்து வகையான நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுள்ளன" என்று வின் குப்தா கவலை தெரிவிக்கிறார். 


Also Read | PSBB: உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்தால் தமிழக அரசு கலைக்கப்படும்-சுப்பிரமணியம் சுவாமி அதிரடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR