விளையாட்டு வினையானது... மாத்திரைகளால் பறி போன 13 வயது சிறுவனின் உயிர்!
சவால் விளையாட்டு ஒன்று வினையில் முடிந்து, சிறுவன் உயிரை பறித்த சம்பவம் பெரும் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில காலத்திற்கு முன்பு சிறு குழந்தைகள் மொபைலில் வீடியோ கேம்களை விளையாடி ஆபத்தில் முடிந்த பல சமப்வங்களை கேட்டிருப்போம். சில ஆபத்தான சவாலால் தங்கள் உயிரையும் சிலர் இழக்கிறார்கள். இப்போது, நீண்ட நாட்களுக்குப் பிறகு, இது தொடர்பான மற்றொரு சமப்வம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் 13 வயது சிறுவன் விளையாட்டாக ஒரு சவாலை ஏற்று, அதன் மூலம், தனது உயிரைப் பறிக்கும் ஒன்றைச் செய்தான். சிறுவன் ஒரு டஜன் பெனாட்ரில் மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொண்டபோது அதிர்ச்சி தரும் சமப்வம் நடந்தது.
உண்மையில், அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த ஒரு சிறுவன் விளையாடிய விளையாட்டு விணையில் முடிந்துள்ளது. இந்த சிறுவனின் பெயர் ஜேக்கப் ஸ்டீவன்ஸ் எனவும் அவருக்கு வயது 13 எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிக்-டாக்கில் 'பெனாட்ரில் சேலஞ்சை' செய்து முடிக்க முயன்றபோது சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. சவாலை முடிக்க, அவர் ஒரே நேரத்தில் 12 முதல் 14 பெனாட்ரில் மாத்திரைகளை உட்கொண்டார். ஆச்சரியம் என்னவென்றால், அந்தச் சிறுவன் சவாலை ஏற்று மாத்திரயை சாப்பிட்டு கொண்டிருந்தபோது, அவனது தோழர்கள் அருகில் நின்று வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் மாத்திரைகளை சாப்பிட்டவுடன், உடனடியாக கீழே விழுந்தான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சுமார் ஒருவாரம் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தான். இந்த விவகாரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் உயர்மட்ட அரசு நிறுவனமான உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) பல ஆண்டுகளாக டிக்-டாக்கில் இயங்கும் 'பெனாட்ரில் சவால்' குறித்து கவலைகளை எழுப்பி வருகிறது.
டிக்டாக்கில் தொடங்கப்பட்ட 'பெனாட்ரில் சவால்' ஆபத்தான அளவு ஓவர்-தி-கவுண்டர் (OTC) மருந்தான டிஃபென்ஹைட்ரமைன் (DHP) ஓரே நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என சவால் வைக்கிறது. Benadryl மற்றும் பிற OTC மருந்துகள் போன்ற தயாரிப்புகளில் இந்த சவால் விடப்படுகிறது. பெனாட்ரில் எளிதில் கிடைப்பதால், இந்த விளையாட்டு என்னும் சவால் சாத்தியமாகியுள்ளது.
மேலும் படிக்க | ஓய்வெடுக்க லட்சக்கணக்கில் சம்பளம்... கரும்பு தின்ன கூலி கொடுக்கும் ‘சில’ வேலைகள்!
மேலும் படிக்க | அம்மா திட்டியதால் வந்த கோபம்! சைக்கிளில் 130 KM சென்று பாட்டியிடம் புகார்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ