காத்மண்டு: இந்தியாவுடன் எல்லை பிரச்சனையை செய்த நேபாளத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது எனவும், சொந்த கட்சிக்குள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலிக்கு எதிராக குரல் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், இன்று அந்நாட்டு தலைநகரான காத்மண்டுவில் நடைபெற்று வரும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் கே.பி.ஷர்மா ஒலி பங்கேற்கவில்லை. அதுமட்டுமில்லாமல் அவர் நேபாளத்தின் ஜனாதிபதி பித்ய தேவி பந்தாரியை சந்திக்க சென்றிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனக்கு எதிராக சொந்த கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதால், ஒருவேளை அவர் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


 



 


இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறி வரும் நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஓலி, தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் அல்லது அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தெளிவாகக் கூறியுள்ளது. அதை சமரச செய்யும் நடவடிக்கைகளை கடந்த இரண்டு நாட்களாக கே பி ஷர்மா ஓலி மேற்கொண்டார். ஆனால் அவருக்கு எதிரான குரல் தொடர்ந்து எதிரொலித்தது.


நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழுவின் உறுப்பினரான லீலமணி போக்ரெல் மற்றும் கட்சியின் முக்கிய சில தலைவர்கள் ஓலி மீது குற்றம்சாட்டினார்கள். அதாவது "இந்தியா உங்களைக் கவிழ்க்கத் திட்டமிட்டுள்ளது என்ற உங்கள் குற்றச்சாட்டு நீங்கள் ஆதாரம் அளிக்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.


மற்றொரு நிலைக்குழு உறுப்பினரான மாட்ரிகா யாதவ், "கட்சியில் ஒரு ரவுடி கும்பல் தலைவரை" போலவே செயல்பட்டதால் ஓலி உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்றார்.