சுனாமி எச்சரிக்கை... பிலிப்பைன்ஸில் 7.5 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...!
Philippines Earthquake: பிலிப்பைன்ஸ் நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று நள்ளிரவில் ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Philippines Earthquake: பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மிண்டானாவ் தீவை மையமாகக் கொண்டு சுமார் 7.5 ரிக்டர் அளவில் இன்று நள்ளிரவு (டிச. 3) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானிய பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, அலைகள் மூன்றடியில் இருந்து அதற்கும் மேலாக சீற்றம் கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறி, ஜப்பானின் தென்மேற்கு கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பபட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதாவது, அலைகள் மூன்றடியில் இருந்து அதற்கும் மேலாக சீற்றம் கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறி, ஜப்பானின் தென்மேற்கு கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பபட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நள்ளிரவில் பெரிய சீற்றத்துடன் கூடிய அலைகள் பிலிப்பைன்ஸ் கடற்கரைகளை பாதிப்பை ஏற்படுத்தலாம் என Phivolcs எனும் பிலிப்பைன் நில அதிர்வு ஏஜென்சி தெரிவித்திருந்தது. ஆனால் அந்த நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் அலை சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வரவில்லை. மேலும், பிலிப்பைன்ஸில் பதிவான இந்த நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. பாதிப்பு குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
பிலிப்பைன்ஸின் சில கடற்கரை பகுதிகளில் வழக்கத்தை விட உயர்மட்டத்தில் அதாவது 3 மீட்டர் வரை அலை சீற்றத்துடன் காணப்பட வாய்ப்பிருப்பதா அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்தது. பின்னர் சுனாமி ஆபத்து இல்லை என்றும் பின்னர் அறிவித்துள்ளது. மேலும், கிடைக்கக்கூடிய அனைத்து தரவுகளின் அடிப்படையில், பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தின் சுனாமி அச்சுறுத்தல் இப்போது நீங்கிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் சுரிகாவோ டெல் சுர் மற்றும் தாவோ ஓரியண்டல் மாகாணங்களின் கடற்கரைக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என Phivolcs தெரிவித்துள்ளது. இரண்டு மாகாணங்களும் பிலிப்பைன்ஸின் மற்ற பகுதிகளைப் போலல்லாமல், பெரும்பாலும் கிராமப்புறம் மற்றும் மக்கள் தொகை அதிகமில்லாத பகுதிகளாகும்.
இன்று நள்ளிரவு 1:30 மணிக்கு ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையை 1 மீட்டர் வரை சுனாமி அலைகள் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நிலநடுக்கத்தில் இருந்து குறிப்பிடத்தக்க சேதத்தை எதிர்பார்க்கவில்லை என்று பிவோல்க்ஸ் கூறியது, ஆனால் பின்விளைவுகளை எச்சரித்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ