இருதரப்பு பேச்சுவார்த்தை மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் சட்டபிரிவு 370 ரத்து செய்ததற்கும், அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. சர்வதேச அமைப்புகளில் அப்பிரச்சினையை எழுப்ப முயன்று வருகிறது. அதன் முயற்சிகளை இந்தியா முறியடித்து வருகிறது. இதுவரை பாகிஸ்தான் முயற்சியில் எந்தவித வெற்றியும் கிடைக்காத நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் சந்திப்பில் மீண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசியது.


இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, இருதரப்பு பேச்சுவார்த்தை மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்., “ஐரோப்பிய நாடுகளுக்கு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் சில அரசியல் காரணங்களுக்காக இது குறித்து குரல் எழுப்ப மறுக்கின்றனர்.


காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால் அவர்கள் எங்களது முயற்சிகளுக்கு எந்த விதமான நேர்மறை பதில்களையும் அளிக்கவில்லை.  எனவே, இந்தியாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை.  மூன்றாவது நாடு தலையிட்டு சமரசம் செய்தால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியும்” என தெரிவித்துள்ளார்.