உடலுறவு... அதுவும் மாணவியுடன் உணவக கழிவறையில் - பெண் ஆசிரியருக்கு வாழ்நாள் தடை!
Women Teacher Sex with Girl Student : 16 வயது சிறுமியுடன் பாலியல் உறவில் இருந்த ஆசிரியைக்கு, இனி எங்கும் ஆசிரியராக பணியாற்ற முடியாத அளவில் வாழ்நாள் தடை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Women Teacher Sex with Girl Student : இங்கிலாந்தில் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு தடை விதிக்கப்பட்டு, இனி அவரது வாழ்நாள் ஆசிரியராக பணியாற்றவே முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த அதிரடி முடிவு அங்குள்ள கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த ஆசிரியை ஏன் இத்தகைய தண்டனை விதிக்கப்பட்டது என்பதை தொடர்ந்து காணலாம்.
இங்கிலாந்தை சேர்ந்த 32 வயதான எரின் ஹெபில்வைட், 16 வயதான மாணவி ஒருவருடன் பாலியல் உறவில் இருந்ததால் அவர் மீது இத்தகைய தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2018ஆம் ஆண்டு நடந்த நிலையில், அவர் இனி ஆசிரியர் பணிக்கே திரும்ப முடியாது என்ற அந்த உத்தரவை கற்பித்தல் ஒழுங்குமுறை நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. முறையற்ற வகையில் பதின் வயது பெண்ணை தன்னுடன் பாலியல் உறவில் இருக்க அழுத்தம் கொடுத்த குற்றத்திற்காக எரினுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு விதித்தது.
உணவகத்தின் கழிவறையில் உடலுறவு...
இங்கிலாந்தின் ஸ்னேர்ஸ்ப்ரூக் க்ரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, எரின் அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக பேசிய மெசேஜ்கள் மற்றும் இருவரும் படுக்கையில் நிர்வாணமாக இருக்கும் ஆபாசமான புகைப்படங்களை அனுப்பியது ஆகியவை உறுதியானது. மேலும், காதலர் தினத்தன்று உணவருந்த சென்ற உணவகத்தின் கழிவறையில் அந்த சிறுமியுடன் எரின் முதல்முறையாக உடலுறவு வைத்துக்கொண்டதாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மேலும், அந்த சிறுமியை முதன்முதலில் முத்துமிட்டதும் எரின் தான் என்பதை சிறுமியின் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | உடலுறவு... 14 வயது மாணவன் வீட்டில் பலமுறை எகிறி குதித்த ஆசிரியை - 50 ஆண்டுகள் சிறை!
ஆசிரியர் மீதான குற்றங்கள்
அந்த சிறுமியின் பெற்றோர், அவளின் மொபைலை எடுத்து நோட்டமிட்டபோது அதில் இருந்த ஆபாச மெசேஜ்கள் மற்றும் புகைப்படங்களை கண்டுள்ளனர். அதை தொடர்ந்தே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. எரின் மீது 13 முதல் 17 வயதுடைய சிறுவருடன் பாலியல் உறவில் இருந்தது, அவரின் நம்பிக்கையை சீர்குலைத்து பதின்வயதினருடன் உறவில் இருந்தது ஆகிய குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், 17 வயதுக்கும் குறைவான சிறுமியின் ஆபாசமான புகைப்படங்களை வைத்திருந்த குற்றத்திற்காகவும் வழக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது அவருக்கான தண்டனைக் காலம் நிறைவுற்ற நிலையில் அவர் ஆசிரியர் பணிக்கே திரும்ப முடியாதாவறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கற்பித்தல் ஒழுங்குமுறை நிறுவனத்தின் மார்க் கேவி என்பவர் வெளியிட்ட அறிக்கையில்,"இந்த வழக்கில், ஒரு சிறுமியுடன் பாலியல் உறவில் இருந்த எரினின் குற்றங்களின் மிகத் தீவிரமான தன்மையை நான் நன்கு புரிந்துகொண்டுள்ளேன். எரின் சார்பாக அவரின் வருத்தத்திற்கான ஆதாரம் ஏதும் இல்லாததையும் நான் கணக்கில் எடுத்துக்கொண்டேன்.
எரின் ஆசிரியர் பணியின் பொறுப்புணர்வை உதாசீனப்படுத்தியுள்ளார். எனது பார்வையில், ஆசிரியர் பணி மீது பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு எரின் மீது தடை உத்தரவை விதிக்க வேண்டியது அவசியம் ஆகும்" என குறிப்பிட்டுள்ளார். எனவே, எரின் மீது கடினமான தண்டனை விதிப்பதற்கான காரணத்தை அவர் விளக்கி உள்ளார்.
மேலும் படிக்க | அதிர்ச்சி... 15 வயது சிறுவர்களுடன் உடலுறவு... கைதான பெண் சொன்ன காரணத்தை பாருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ