இந்தோனேசியாவின் பாராளுமன்றம் புதிய குற்றவியல் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி யாராவது சிக்கினால், அவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். தற்போது இந்த செய்தி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உலகில் முதன் முதலில் இந்தோனேஷியா தான் இப்படி ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது என்றாலும், உலகில் ஏற்கனவே பல நாடுகளில் இந்த மாதிரியான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மேலும் திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டால் இந்தோனேசியாவை விட கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இந்த வகையான சட்டம் நடைமுறையில் உள்ள நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. கத்தார்


கத்தாரில் திருமணம் செய்யாமல் உடல் உறவு மிகவும் தவறான செயலாக கருதப்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் திருமணத்திற்கு முன் உடலுறவுக்கு முழுமையான தடை உள்ளது. இந்த விதியை மீறி யாராவது சிக்கினால், அவருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இதை செய்பவர் முஸ்லிமாக இருந்தால் கசையடி கிடைக்கும். மறுபுறம், திருமணமாகி, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தால், அவருக்கு கல்லெறிதல் தண்டனை. மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணிற்கும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


2. சவுதி அரேபியா


இஸ்லாமிய  சட்டம் இந்த நாட்டிலும் பொருந்தும். இதன்படி திருமணமாகாதவர்கள் உடலுறவு கொள்ள முடியாது. இங்கு இப்படி செய்து பிடிபட்டால் 4 சாட்சிகள் இருப்பது அவசியம். 4 சாட்சிகள் கிடைத்தால், குற்றவாளிகளை சரமாரியாக அடிக்கும் வழக்கம் உள்ளது.


3. ஈரான்


இஸ்லாமிய நாடான ஈரான் அடிப்படைவாதம் நிறைந்தது. இங்கும் உடல் உறவு கொள்ள திருமணம் அவசியம். திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும். திருமணமாகாத இருவர் உடலுறவு கொண்டு பிடிபட்டால் அவர்களுக்கு தலா 100 கசையடி வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் கற்களால் அடித்துக் கொல்லப்படுகிறார்.


4. ஆப்கானிஸ்தான்


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்து வருகின்றனர். தலிபான்கள் ஷரியா சட்டத்தை பின்பற்றுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இந்த இஸ்லாமிய தேசத்தில் கூட திருமணம் செய்யாமல் உறவுகொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இங்கே யாராவது இப்படிச் செய்து பிடிபட்டால் அவருக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும். இங்கு குற்றவாளிகளான தம்பதிகள் இறக்கும் வரை கற்களை எரிந்து அடிக்கும் வழக்கம் உள்ளது.


5. பாகிஸ்தான்


பாகிஸ்தானும் இஸ்லாமிய சட்டத்தை அதிக அளவில் பின்பற்றுகிறது. இங்குள்ள ஹூதூத் கட்டளைச் சட்டத்தின்படி, விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிடலாம். ஆனால், இதுவரை சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம், திருமணமாகாதவர்கள் உடலுறவில் ஈடுபட்டால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை.


மேலும் படிக்க | திருமணமாகாமல் லிவ்விங் டு கெதரா? ஓராண்டு சிறைதண்டனை! அதிர வைக்கும் புதியச் சட்டம்


6. சோமாலியா


ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியாவிலும் இஸ்லாமிய சட்டம் பின்பற்றப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், திருமணமாகாதவர்கள் உடல் ரீதியில் உறவுகொள்வது இங்கு ஷரியா சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பிடிபட்டால் மரண தண்டனை. 2008 ஆம் ஆண்டு, விபச்சாரக் குற்றத்திற்காக ஒரு இளம் பெண்ணுக்கு நீதிமன்றத்தால் கல்லெறியும் தண்டனை விதிக்கப்பட்டது.


7. சூடான்


சூடானும் இஸ்லாமிய நாடுதான். ஷரியா சட்டம் இங்கும் பொருந்தும். இதன் கீழ், இந்த நாட்டில் கூட, திருமணத்திற்கு முன் உறவு கொள்ள முடியாது. 2012ம் ஆண்டில், இன்திசார் ஷெரீப் அப்துல்லா என்ற இளம் பெண் இந்த சட்டத்தை மீறினார். அதன் பிறகு அவருக்கு கல்லெறிந்து மரண தண்டனை விதிக்கப்பட்டது.


8. பிலிப்பைன்ஸ்


பிலிப்பைன்ஸ் இஸ்லாமிய நாடாக இல்லாவிட்டாலும் இங்குள்ள அரசு திருமணத்திற்கு முன் உடலுறவுக்கு தடை விதித்துள்ளது. இங்கும் யாராவது இந்த சட்டத்தை மீறினால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.


9. எகிப்து


எகிப்து ஒரு இஸ்லாமிய நாடு என்பதாலும், இஸ்லாமிய சட்டம் இங்கு அமலில் உள்ளதாலும் இங்குள்ளவர்களும் திருமணத்திற்கு முன் உறவுகொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு செய்வது குற்றமாக கருதப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில், தோஹா சலா என்ற தொலைக்காட்சி தொகுப்பாளர், திருமணத்திற்கு முன் உறவு பற்றி டிவியில் விவாதித்தார், அதன் பிறகு அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.43 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


மேலும் படிக்க | மாந்தரீகர் கட்டுபாட்டில் புடின்; மான் இரத்தத்தில் குளியில்... ரஷ்ய பத்திரிகையாளரின் பகீர் தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ