வட கொரியாவுடன் உயர்நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருந்தபோதிலும், அதை வடகொரியா புறக்கணிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் வட கொரியாவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை வாஷிங்டன் விரும்புவதாக பலமுறை பகிரங்கமாக கூறியுள்ளனர்.


இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (ஜூன் 7, செவ்வாய்கிழமை) கூறுகையில், பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவிடம் பல முறை முன்வந்தும், வட கொரியா  புறக்கணித்துள்ளது. கோவிட் பரவலில் உதவுவதற்கான அமெரிக்காவின் உதவியையும் தேவையில்லை என்று வடகொரியா புறக்கணித்துவிட்டது என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | வடகொரியா மீது பொருளாதாரத் தடை: வீட்டொ அதிகாரத்தை பயன்படுத்திய இரு நாடுகள்


பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வடகொரியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய பின்னர், வடகொரியாவுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி சுங் கிம் பேசினார்.


அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் "முன்நிபந்தனைகள் இல்லாமல்" கொரிய ஜனநாயக மக்கள் குடியரசுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை வாஷிங்டன் விரும்புவதாக பலமுறை பகிரங்கமாக கூறியுள்ளதையும் அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி சுங் கிம் சுட்டிக்காட்டினார். 


"இந்தச் செய்தியை தனியார் சேனல்கள் மூலமாகவும் அனுப்ப நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இதில் அமெரிக்க உயர் அதிகாரிகளிடமிருந்து மூத்த DPRK அதிகாரிகளுக்கு உயர்மட்ட தனிப்பட்ட செய்திகளும் அடங்கும்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


மேலும் படிக்க | தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்களின் பேச்சுவார்த்தை


"கடந்த ஆண்டில், நாங்கள் பல வழிகளில், மூன்றாம் தரப்பினர் மூலமாகவும், நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளோம்" என்று அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி சுங் கிம் மேலும் கூறினார்.


வடகொரியாவுக்கான மனிதாபிமான ஒத்துழைப்பு மற்றும் வட கொரியாவில் சமீபத்திய கோவிட் -19 வெடிப்புக்கான உதவி செய்ய தயாராக இருப்பது குறித்த முன்மொழிவுகளும் அடங்கும் என்றும் வடகொரியாவுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி சுங் கிம் கூறினார்.


"இருப்பினும், இன்றுவரை, வடகொரியா பதிலளிக்கவில்லை மற்றும் பேச்சுவார்த்தையில் ஆர்வம் இருப்பதாகக்கூட, வடகொரிய மூத்தத் தலைவர் கிம் ஜாங் உன் காட்டிக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  


இதனிடையில் வடகொரியா, மேலும் புதிய அணு ஆயுத சோதனைகளை நடத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது


மேலும் படிக்க | தைவான் விஷயத்தை பகடைக்காயாக பயன்படுத்துகிறதா அமெரிக்கா


முன்னதாக, வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளை தண்டிக்கும் அமெரிக்காவின் முயற்சியை நிறுத்த ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தின.


தென்கொரியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சியோலில் இருந்து புறப்பட்டுவிட்டார். அவர் கிளம்பிய உடனேயே, வட கொரியா அதன் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) உட்பட மூன்று ஏவுகணைகளை சோதனை செய்தது.


இது மேற்கத்திய நாடுகளுக்கு அச்சம் விளைவித்துள்ள நிலையில், வட கொரியாவின் மீதான கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்தது.


இந்த நிலையில், ரஷ்யா மற்றும் சீனா என இரு நாடுகளும் தங்கள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, வடகொரியா மீதான அமெரிக்காவின் கூடுதல் பொருளாதாரத் தடை தொடர்பான தீர்மானத்தை நிறுத்தியுள்ளன. 


மேலும் படிக்க | தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்களின் பேச்சுவார்த்தை: வடகொரியா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR