தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்களின் பேச்சுவார்த்தையின் மையம் வடகொரியா

சியோலில் நடைபெறும் அமெரிக்கா-தென்கொரியா சந்திப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறும். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 21, 2022, 03:16 PM IST
  • தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் அமெரிக்க அதிபர்
  • ஜோ பிடனுக்கு தென்கொரிய அதிபர் வரவேற்பு
  • அமெரிக்க அதிபருடன் கலந்தாலோசனை செய்யும் தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல்
தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்களின் பேச்சுவார்த்தையின் மையம் வடகொரியா title=

தென்கொரியாவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பல முக்கிய முடிவுகளை எடுப்பார்.சியோலில் நடைபெறும் அமெரிக்கா-தென்கொரியா சந்திப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறும். 

சுற்றுப்பயணத்தில், இன்று, (2022 மே 20) தென் கொரியாவின் பியோங்டேக்கில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் பியோங்டேக் வளாகத்தில் உள்ள செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சென்றிருந்தார். 
அப்போது அவருடன் இருந்த தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல், அங்குள்ள விஷயங்களை எடுத்துரைத்தார்.

யூன் சுக்-யோல் மற்றும் ஜோ பிடன் ஆகிய இரு தலைவர்களும் அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதாக பிடென் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி சனிக்கிழமை (2022 மே 20) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க | வட கொரியாவில் ஒரே நாளில் 2.3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு காய்ச்சல்

11 நாட்களுக்கு முன்னர் தென் கொரியாவின் புதிய அதிபராக பதவியேற்ற மக்கள் சக்தி கட்சியின் சார்பாக யூன் சுக்-யோல், அமெரிக்க அதிபர் ஜோ பிடனை முதன்முறையாக அதிபராக சந்திக்கிறார்.

இரு தலைவர்களுக்கிடையிலான முதல் சந்திப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் மற்றும் அந்நாட்டுடனான அரசியல் முட்டுக்கட்டை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் புதிய அணு ஆயுத சோதனையை நடத்துவார் என்ற அச்சங்களுக்கு மத்தியில் தென் கொரியாவுக்கு ஜோ பிடன் சென்றுள்ளார்.  

மேலும் படிக்க | வடகொரியாவின் மேம்பட்ட அணுகுண்டு செயல்திறன் சோதனை

தென் கொரிய தலைநகர் சியோலில் பிடென் மற்றும் சுக்-யோல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இரு தலைவர்களும் அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார்கள் என்றும், வட கொரியாவுடனான இராஜதந்திரத்திற்கு வாஷிங்டன் தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா கூறுகிறது.

"இராஜதந்திர அணுகுமுறைக்கான வழிகளைக் கண்டுபிடிப்பது எங்கள் விருப்பம்" என்று அந்த அதிகாரி கூறினார்.  மேலும், "எந்த முன்நிபந்தனையும் இன்றி, அவர்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கிறோம் என்பதை நாங்கள் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளோம், மேலும் COVID உட்பட அவர்களின் உள்நாட்டு சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா, வட கொரிய விவகாரத்தில் எவ்வாறு செயல்பட ஈடுபட திட்டமிட்டுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 

மேலும் படிக்க | வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகள்! 

முன்னதாக, வடகொரியாவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் முந்தைய அதிபர்கள் முயற்சி எடுத்தனர். இந்த இரு நாடுகளிலும் அரசியல் மாற்றமும், அதிபர் மாற்றமும் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய அதிபர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

world

மேலும், கிம் ஜாங்-உன் தலைமையிலான வடகொரியா, அமெரிக்க அதிபராக ஜோ பிடென் பதவியேற்றதிலிருந்து அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கவில்லை. தற்போதைய தென்கொரிய அதிபர் யூன், இதற்கு முந்தைய அதிபரான மூன் ஜே-இன் மேற்கொண்டதைவிட கடுமையான போக்கை வடகொரியாவுடன் மேற்கொண்டுள்ளார். 

கொரிய தீபகற்பத்தின் அண்டை நாடுகளான இரண்டுக்கும்  இடையில் மோதல் போக்கு முற்றினால், தென்கொரியா, அமெரிக்காவின் உதவியை நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உடனடி தாக்குதலுக்கான அறிகுறி தென்பட்டால், தென்கொரியாவின் தடுப்பு திறனை வலுப்படுத்துவதாக அமெரிக்க அதிபர் உறுதியளித்தார்.

மேலும் படிக்க | தைவான் விஷயத்தை பகடைக்காயாக பயன்படுத்துகிறதா அமெரிக்கா

ஏற்கனவே ரஷ்யா-உக்ரைன் போரால் உலகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு போரை யாரும் விரும்பவில்லை என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும், வட கொரியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதை வடக்கொரியா தற்போதுதான் அங்கீகரித்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் போர் அபாயத்திற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

சனிக்கிழமையன்று தொடர்ந்து ஐந்தாவது நாளாக வடகொரியாவில் புதிதாக 200,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.

இருந்தாலும் அந்நாட்டில், தடுப்பூசிகள் அல்லது தொற்றுநோய்க்கான நவீன சிகிச்சைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நிறைய சாப்பிட்டா நாட்டுக்கு நல்லதல்ல’ அதிபர் கிம்மின் உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News