புதுடெல்லி: பிரிட்டன் நீதிமன்றம் ஒன்று அறிவித்த தீர்ப்பு இதுவரை இந்த உலகத்திலே எந்தவொரு நீதிபதியும் வழங்காத தீர்ப்பு! இதைக் கேட்கும் அனைவருக்கும் ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் ஏற்படுகிறது. அப்படி என்ன வித்தியாசமான தீர்ப்பு இது என்று தெரியுமா?   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளைஞர் ஒருவருக்கு எதிராக நீதிபதியின் விசித்திரமான தீர்ப்பின்படி, அந்த இளைஞர் உடலுறவு கொள்ள விரும்பினால் அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் மற்றும் காவல்துறைக்கு 24 மணி நேரத்திற்கு முன் நோட்டீஸ் அதாவது தகவல் கொடுக்க வேண்டும். தீர்ப்பைக் கேட்டதும், நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு என்று அந்த இளைஞர் சொன்னாரா என்ற கேள்வி தான் முதலில் எழுகிறது. ஆனால், இவர் பஞ்சாயத்து நாட்டாமை அல்ல, லண்டன் நீதிமன்றம் ஒன்றின் நீதிபதி என்பதால் இளைஞர் தலைகுனிந்து நின்றுவிட்டாராம்!


Also Read | பொண்ணு எப்டி இருந்தாலும் பரவா இல்ல.. எனக்கு கல்யாணம் பண்ணுங்க!


இங்கிலாந்து நீதிமன்ற நீதிபதி அறிவித்த பாலியல் வழக்கு தீர்ப்பு அனைவரிடம் சலசலப்பை ஏற்படுத்தும் ஒரு வினோதமான தீர்ப்பாக இருக்கிறது. ஒரு இளைஞனருக்கு எதிராக நடந்து வரும் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உடலுறவுக்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட பெண் மற்றும் போலீசாருக்கு அவர் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.


அந்த இளைஞருக்கு எதிராக லண்டனில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட நபர், எந்தவொரு பெண்ணுடனும் உடலுறவு கொள்ள வேண்டும் என்றாலும், அதுதொடர்பாக 24 மணி நேரத்திற்கு முன்னர் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் காவல்துறையினருக்கும் தகவல்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.


Also Read | Corona காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி சம்பாத்தித்த இந்தியர் யார்?


39 வயது நபருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது


39 வயதான டீன் டயர் (Dean Dyer) பல பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கியுள்ளவர்.  விருந்து ஒன்றின்போது இளைஞன் தன்னை தவறாக பயன்படுத்தியதாக ஒரு பெண் குற்றம் சாட்டினார். இளைஞருக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, பாலியல் பலாத்காரம் செய்யப்போவதாக Dean Dyer மிரட்டியதாக குற்றம் சாட்டியிருந்தார்.


14 வயது சிறுமியும் Dean Dyer மீது குற்றம் சாட்டியுள்ளார்


14 வயது சிறுமியுடன் உறவு கொள்ள முயற்சிப்பது உட்பட பாலியல் குற்றங்கள் தொடர்பான 7 குற்றச்சாட்டுகள் Dean Dyer மீது உள்ளன. இருப்பினும், அவருக்கு எதிரான எந்தவொரு கிரிமினல் குற்றமும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.


Also Read | காதலுக்கு கண்ணு மட்டுமா இல்ல, வயசும் இல்லை; 36 வயது வித்தியாசத்தில் மலர்ந்த காதல்!


வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு பின்னர், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக பாலியல் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் (Westminster Court) விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள விரும்பினால், தனது நோக்கம் குறித்து சம்பந்தப்பட்ட பெண் மற்றும் போலீசாருக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது உலகில் முதல்முறையாக வெளிவந்த தீர்ப்பாக இருக்கும்.


பெண்களுடன் தேவையின்றி பேசுவதை தடைசெய்தது


விசாரணைக்கு பின் தீர்ப்பளித்த நீதிபதி, அந்த இளைஞன் பெண்களுடன் தேவையற்ற உரையாடல்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் சொல்லிவிட்டார். Sexual Restraint Order என்பது பாலியல் தடை உத்தரவு பிரிட்டனில் சிவில் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்காக போடப்படுகிறது. குற்றவாளிகள் என நிரூபிக்கப்படாத ஆனால் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அஞ்சப்படுபவர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Also Read | Tractor Rally சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR