பிரிட்டன் பாகிஸ்தானை கடுமையாக சாடி, சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என கூறியது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (British Prime Minister Boris Johnson) பாகிஸ்தான் அரசை கண்டித்து, நாட்டின் அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க பாகிஸ்தான் அரசு உத்தரவாதம்  அளிக்க வேண்டும் என்றார்.


 இந்த விஷயம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. அதன் பிறகு ஜான்சன் பாராளுமன்றத்திலேயே ஒரு அறிக்கையை வெளியிட்டார்.


பெஷாவரில், மஹ்மூத் கான் என்ற அஹ்மதி குடிமகன் கொலை செய்யப்பட்ட பின்னர் இந்த விஷயம் சூடு பிடித்தது. அண்மையில் பெஷாவரில் ஒரு அஹ்மதி குடிமகன் கொலை செய்யப்பட்ட நான்காவது சம்பவம் இதுவாகும். அதன் பின்னர் இந்த பிரச்சினை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. இங்கிலாந்தில், தெற்காசியா மற்றும் காமன்வெல்த் நாடுகளின் விவகாரத்துறை அமைச்சர் லார்ட் அகமது மற்றும் பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரின் மசாரி ஆகியோர் இந்த விஷயத்தில் இங்கிலாந்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேட்டனர். அதன் பிறகு போரிஸ் ஜான்சன் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மையினரின் கொலைகள் மற்றும் அவர்களுக்கு இழைக்கப்படும் அட்டூழியங்களை பார்த்து ஒருவர் கண்களை மூடிக்கொள்ள முடியாது என்றார்.


ALSO READ | US Election 2020: ஜோ பிடனுக்கு வாழ்த்து சொல்லாமல் சீனா மவுனம் காப்பது ஏன்..!!!


பாகிஸ்தானில் இயக்கங்களின் தாக்கம் பிரிட்டனின் தெருக்களிலும் காணப்படுகிறது என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் கூறினார். அதன் பின்னர் அரசு சார்ந்த அமைப்புகள் சிறுபான்மையினரை ஒடுக்கும் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறியது.


பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்களை இந்திய அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. குறிப்பாக, இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மீதான அட்டூழியங்கள் மற்றும் அவர்களை கட்டாய மதமாற்றம் செய்வதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த வாரத்திலேயே, இந்திய அரசு டெல்லியில் ஒரு பாகிஸ்தான் தூதரை வரவழைத்து, கர்த்தார்பூர் சாஹிப் குருத்வாராவின் (Kartarpur Sahib Gurudwara)  நிர்வாகத்தை ஒரு சீக்கியர் கூட இல்லாத ஒரு குழுவிடம் ஒப்படைப்பதை எதிர்த்தது.


ALSO READ | ஈரான் பிராந்தியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: சவுதி அரேபியா


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR