அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், மெர்சிட் கவுண்டி என்ற இடத்தில், இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த அரூஹி தேரி என்ற 8 மாத குழந்தை, அதன் தாயார் ஜஸ்லீன் காவ் (27), தந்தை ஜஸ்தீப் சிங் (36), உறவினர் அமந்தீப் சிங் (39)ஆகியோர் கடந்த திங்கட்கிழமை அன்று (அக். 3) ஒருவரால் கடத்தப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்களை துப்பாக்கி முனையில் வீட்டிலிருந்து ஒருவர், கடத்திச்செல்லும் சிசிடிவி காணொலி போலீசாரால் வெளியிடப்பட்டது. இந்த காணொலி வெளியாக சில மணிநேரங்களின் கடத்தப்பட்டவர்களின் உடல் அவர்களின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கொலைசெய்யப்பட்டவர்கள், பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்களின் உடலை இந்தியா கொண்டுவர  உதவி செய்ய வேண்டும் என அரசுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


மேலும் படிக்க | இந்திய இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலி: குழந்தைகளை பாதுகாக்க WHO எச்சரிக்கை



மெர்சிட் கவுண்டின் சாலையில், கேட்பாற்று இருந்த கார் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, காரை ஆய்வு செய்தததில் அதில் யாருமில்லை. விசாரணையில் அந்த கார் அமந்தீப் சிங் என்பவரின் கார் என போலீசாருக்கு தெரியவந்தது. அவரது இல்லத்தில் சென்று பார்த்தபோது, அங்கு யாருமில்லை. அவரை கண்டுபிடிக்க, அவரது உறவினர்களை தொடர்புகொண்டபோது, அவர்களையும் காணவில்லை. அதன்பின்னர், அவர்கள் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்த போது, அவர்கள்  கடத்தப்பட்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. 


இதைத்தொடர்ந்து, மக்கள் கடத்தப்பட்டவர்களை அடையாளம் காண வேண்டும் என்பதால், விசாரணை அதிகாரிகள் அந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர். பல்வேறு அமெரிக்க செய்தி சேனல்களும் அதை ஒளிபரப்பின. இதுதொடர்பாக, ஜீசஸ் மானுவல் சல்காடோ என்பவர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார். அவர் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


 



தொடர்ந்து, தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளி ஒருவர், நேற்று (அக். 5) மாலை அங்கு நான்கு பேரின் உடலையும் கண்டுள்ளார். தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நான்கு பேரின் உடல்களும் தோட்டத்தில் ஒரே இடத்தில் கைப்பற்றப்பட்டது. 


செய்தியாளர்களை சந்தித்த மெர்சிட் கவுண்டி செரிஃப், வெர்ன் வார்ன்கே,"கைதுசெய்யப்பட்ட சல்காடோ அவரின் குடும்பத்தினரிடம் இந்த கடத்தலில் ஈடுபட்டது குறித்து ஒப்புக்கொண்டுள்ளார். அவரது குடும்பத்தின் கொடுத்த தகவலின்பேரில் தான் அவரை கைது செய்தோம். கைதுசெய்யப்பட்டவருக்கு என்று நிச்சயம் நரகத்தில் தனி இடம் இருக்கும். என்னுடைய கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை" என உணர்ச்சிவசமாகப் பேசினார்.  


மேலும் படிக்க | Jalpaiguri: துர்கா பூஜை சிலைக் கரைப்பின் போது ஆற்றில் வெள்ளம்: 7 பேர் பலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ