பாகிஸ்தானுக்கு அணுமின் நிலையம் கட்ட உதவும் சீனா! நன்றியில் நெகிழும் பாக் பிரதமர்
Chashma-V Nuclear Power Plant: சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் 1200 மெகாவாட் அணுமின் நிலையப் பணிகளை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்
இஸ்லாமாபாத்: 3.5 பில்லியன் டாலர் செலவில் சீனா வடிவமைத்த சாஷ்மா- 5 அணுமின் நிலையத்தை பாகிஸ்தான் பிரதமர் திறந்து வைத்தார். பாகிஸ்தான் பல ஆண்டுகளாகப் பொருளாதார சீர்கேடுகளால் தள்ளாடி வருகிறது, இதன் விளைவாக பணவீக்கம் அதிகரித்து மக்கள் மீது கடுமையான நிதிச் சுமைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை எடுத்துக்காட்டும் வகையில், பஞ்சாப் மாகாணத்தில் புதிய 1200 மெகாவாட் அணுமின் நிலையத்தை பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தொடங்கி வைத்தார். சாஷ்மா-5 எனப்படும் இந்த மின் உற்பத்தி நிலையம், 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது.
சாஷ்மா-5 அணுமின் நிலையம், இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான நட்பின் மைல்கல்லை குறிப்பதாக கூறும் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், இந்த அணுமின் நிலையம் இரு அண்டைநாடுகளின் இணக்கத்தன்மைக்கு சான்று என்று குறிப்பிட்டு பேசினார்.
அதோடு, சாஷ்மா-5 அணுசக்தித் திட்டத்தை இரண்டு "சிறந்த நண்பர்களுக்கு" இடையேயான "ஒத்துழைப்பின் அற்புதமான சின்னம்" என்று அவர் குறிப்பிட்டார். சீனா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கும் அண்டை நாடான இந்தியா, இந்த அணுமின் நிலைய கட்டுமானத்தை கூர்ந்து கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பாதுகாப்பு உட்பட பல்வேறு விஷயங்கள் இந்த அணுமின் நிலைய கட்டுமானத்தில் உள்குத்தாகவும் இருக்கலாம்.
"சுத்தமான, திறமையான மற்றும் ஒப்பீட்டளவில் மலிவான எரிசக்தியை மேம்படுத்துவதற்கான இந்த பரஸ்பர ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புக்கான பரிசு மற்றும் பிற நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது" என்று பாகிஸ்தான் பிரதமர் கூறுகிறார்.
மேலும் படிக்க | நீ எவ்வளவு பெரிய பிஸ்தாவா இருந்தா எனக்கென்ன? 19 அடி மலைப்பாம்பு வீடியோ வைரல்
பாகிஸ்தானுக்கான எரிசக்தி உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது
அடுத்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளுக்குள் இந்த அணுமின் நிலையத்தில் இருந்து மின்சாரத்தை பெறலாம் என்று கூறும் பாகிஸ்தான் பிரதமர், சாஷ்மா-5 அணுமின் நிலையம், பாகிஸ்தான் மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
பாகிஸ்தானின் தொழில்துறை மற்றும் விவசாயத் துறைகளுக்கு நீண்ட காலமாக மலிவான மற்றும் திறமையான எரிசக்தி ஆதாரங்கள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது. அதிலும், அனைத்து வானிலைக்கும் ஏற்ற வகையிலான புதிய மின் உற்பத்தி நிலைய ஒத்துழைப்பு அந்த கவலைகளை நிவர்த்தி செய்வதையும் பாகிஸ்தானின் எரிசக்தி உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சீனாவின் ஆதரவு
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் இன்றியமையாத பங்கை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், சீனாவின் அசைக்க முடியாத ஆதரவிற்கு பிரதமர் ஷெரீப் நன்றி தெரிவித்தார். இந்த அணுமின் ஆலையின் கட்டுமானத்தில், எங்கள் நம்பகமான நண்பர் சீனாவின் பங்கைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது" என்று அவர் கூறினார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சாஷ்மா-5 உட்பட சாஷ்மா மின் உற்பத்தி நிலையங்கள் பாகிஸ்தானில் மலிவு விலையில் அணுசக்தியை உற்பத்தி செய்வதற்கு முக்கியமானவை. தற்போதுள்ள நான்கு மின் உற்பத்தி நிலையங்களும் இணைந்து 1,330 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என பாகிஸ்தான் அணுசக்தி ஆணையம் தெரிவித்துள்ளது.
இவை தவிர, கராச்சி அணுமின் நிலையங்கள் (KANUPP 2 & 3) ஆகிய இரண்டு அணுமின் நிலையங்கள் ஏற்கனவே 2,290 மெகாவாட் திறனுடன் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்வின் போது பேசிய பிரதமர் ஷெரீப், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய சீனா வழங்கிய உதவிகளையும் சுட்டிக்காட்டினார். மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) வெற்றிகரமான ஒப்பந்தத்தை அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் சீனாவின் ஆதரவு முக்கியப் பங்காற்றியது, கடந்த நான்கு மாதங்களில் பாகிஸ்தானுக்கு 5 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வழங்கியது குறித்தும் அவர் கூறினார்.
"பாகிஸ்தான் எதிர்கொள்ளும் கடினமான காலங்களில் ஒரு சிறந்த நண்பராக, சீனா பல விதங்களிலும் தோள் கொடுக்கிறது என்று அவர் கூறினார். பாக்கிஸ்தான் பல ஆண்டுகளாக தள்ளாடும் பொருளாதாரத்துடன் போராடி வருகிறது, இதன் விளைவாக பணவீக்கம் அதிகரித்து மக்களின் தினசரி வாழ்க்கையே மிகவும் கடினமானதாகிவிட்டது.
மேலும் படிக்க | விபத்தில் தனியாய் கழன்ற தலையை உடலுடன் பொருத்திய மருத்துவ அதிசயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ