பெய்ஜிங்: சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் நிலை குறித்து ஒரு பெரிய வெளிப்பாடு வரவிருந்தது. ஆனால் பெய்ஜிங்கின் கொடூரமான முகம் உலகுக்கு வெளிப்படுவதற்கு முன்பு, அப்படிப்பட்ட வெளிப்பாட்டை உலகின் முன்னால் செய்வதாக இருந்த நபர் கொல்லப்பட்டார். இருப்பினும், சீன கம்யூனிஸ்ட் அரசாங்கம் இந்த கொலையை 'சாதாரண' மரணம் என்று கூறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்துல்கஃபூர் ஹபீஸ் (Abdulghafur Hapiz) என்ற உய்குர் முஸ்லீம் (Uyghur Muslim) ஒருவர் காணாமல் போனது பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. காணாமல் போன அந்த நபர் இறந்து விட்டார் என்பதை சீனா (China) ஐக்கிய நாடுகள் சபையில் (UN) ஒப்புக் கொண்டுள்ளது.


ஏப்ரல் 2019 இல், உய்குர் சமூகத்தைச் சேர்ந்த அப்துலை நீண்ட காலமாக காணவில்லை என்றும், அவரைப் பற்றி எந்த தகவலையும் சீன அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை என்றும்,வற்புறுத்தலால் அல்லது தன்னிச்சையாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவுக்கு புகார் அளிக்கப்பட்டது. சீனா இந்த விஷயத்தில் அன்றிலிருந்து மௌனமாக இருந்து வருகிறது. இப்போது அப்துல் இறந்துவிட்டார் என்று சீனா கூறுகிறது.


ALSO READ: Ramzan-னிலும் நோன்பை கடைபிடிக்க அனுமதி இல்லை: China-வில் கொடுமைப்படுத்தப்படும் இஸ்லாமியர்கள்!!


அப்துலுக்கு நிமோனியா ஏற்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது


நிமோனியா மற்றும் காசநோய் காரணமாக அப்துல் கஃபூர் நவம்பர் 3, 2018 அன்று இறந்துவிட்டதாக பெய்ஜிங் (Beijing) ஐக்கிய நாடுகள் சபையிடம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இறந்தவரின் மகள் இதை ஏற்கத் தயாராக இல்லை. தனது தந்தை ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள சின்ஜியாங் முகாமில் வலுக்கட்டாயமாக சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் அவர் சித்திரவதை காரணமாக இறந்தார் என்றும் அவர் கூறுகிறார்.


2017 முதல் முகாமில் இருந்தார்


தி கார்டியனின் படி, ஐ.நா. WEID க்கு சமர்ப்பித்த ஆவணத்தில் கஃபூரின் மரணத்தை சீனா ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் கஃபூர் நிமோனியா மற்றும் காசநோயால் இறந்துவிட்டார் என்று சீனா கூறியுள்ளது. தனது தந்தைக்கு நீரிழிவு நோய் மட்டுமே இருப்பதாக கஃபூரின் மகள் பாத்திமா (பாத்திமா அப்துல்கஃபர்) கூறுகிறார். தனது தந்தை 2017 முதல் சின்ஜியாங் (Xinjiang) மாகாணத்தில் ஒரு முகாமில் வைக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.


முக்கியமான விஷயத்தை வெளியிடவிருந்தார்


பாத்திமா தனது தந்தையின் கடைசி செய்தியை வீசாட்டில் பெற்றதாகக் கூறுகிறார். அதில் அவர் தனக்கு மிக முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்பியதாகவும் அவர் தெரிவிக்கிறார். ஆனால் பின்னர் ஃபாத்திமா அவரை அழைத்தபோது அவரால் தன் தந்தையை தொடர்பு கொள்ள முடியவில்லை. அன்றிலிருந்து அவரைக் காணவில்லை.


பாத்திமாவின் கூற்றுப்படி, சீன அதிகாரிகள் தனது தந்தையைப் பற்றி எந்த தகவலையும் கொடுக்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்ல பாத்திமா இப்போது யோசித்து வருகிறார். தனது தந்தையின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய தான் அனைத்து முயற்சிகளையும் எடுக்கப்போவதாக அவர் கூறுகிறார்.


நாட்டு மக்கள் தங்கள் நாட்டில்கூட சுதந்திரமாக பேச மடியாமல், நினைப்பதை செய்ய முடியாமல் இருப்பது கொடூரம். அத்தகைய கொடூர ஆட்சியைத் தான் சீனா தன் மக்களுக்கு அளித்து வருகிறது. அதுவும், அங்குள்ள சிறுபான்மை உய்குர் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகள் மிக கொடூரமானவை. இப்போதுதான் இவை வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆனால், வெளிவரும் குரல்களும் இப்படி அடக்கப்படுவது வேதனையான விஷயமாகும். 


ALSO READ: Viral Video: ‘வேண்டாம்…..விட்டுடு’ என வடிவேலு style-ல் அழும் சீன வீரர்கள்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR