பெய்ஜிங்: குளிர் அலையால் மட்டுமல்ல இயற்கை எரிவாயு பற்றாக்குறையாலும் அவதியுறும் சீன மக்களின் உறைந்து போன வாழ்க்கை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு போதுமான எரிவாயு விநியோகத்தை பராமரிக்க முடியாமல் நாடு திண்டாடுகிறது. இது குளிர்காலத்தை மக்களுக்கு கொடுமையானதாக மாற்றிவிட்டது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்கனவே அரசாங்கத்தின் மீது கோபத்தில் இருக்கும் சீனர்களுக்கு குளிர்கால புயலுக்கு இடையில், இயற்கை எரிவாயுவின் கடுமையான பற்றாக்குறை சங்கடங்களை அதிகரித்துள்ளது. இதனால், சமூக ஊடகங்களில் சீன அரசு மீது கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது.


சமூக ஊடக தளங்களில், வைரலாகும் ஒரு வீடியோவில், வடக்கு மாகாணமான ஷாங்க்சியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில், பிரகாசமான சிவப்பு சுவரொட்டிகள் ஜன்னல்களில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் "குளிர்" என்று கூறுகின்றன.


மேலும் படிக்க | அமெரிக்காவில் NRI சுட்டுக்கொலை, குடும்பத்தினர் காயம், ஒree வாரத்தில் 2வது சம்பவம்


டிசம்பர் தொடக்கத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது "பூஜ்ஜிய கோவிட்" கொள்கையை கைவிட்டதிலிருந்து சீனாவில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா கொள்கை தளர்த்தப்படுவதற்கு முன்பு, நீண்டகாலமாக தொடர்ந்த கடுமையான கட்டுப்பாடுகளால் மக்கள் விரக்தியின் உச்சத்தில் இருந்தனர்.


வெகுஜன சோதனை உள்ளிட்ட பெரிய அளவிலான முன்னெச்சரிக்கைகளால் நொந்து நூலானது சீன குடிமக்கள் மட்டுமல்ல, உள்ளூர் அரசாங்கங்களின் நிதிநிலையும் தான். சீனாவின் பல நகரங்களில், இப்போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட பணம் இல்லை, வீடுகளுக்கு போதுமான எரிவாயு விநியோகத்தை பராமரிக்க முடியாமல், உள்ளூற் நிர்வாகங்கள் தள்ளாடுகின்றன.  


உறைகுளிர் நிலவும் இந்த குளிர்காலத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி, சீனாவின் எரிசக்தி கட்டுப்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பில் உள்ள அமைப்பு ரீதியான பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்டுள்ள உலகளாவிய சந்தை பிரச்சனைகளின் ஒரு எடுத்துக்காட்டு இது என்று சொல்லலாம்.  


மேலும் படிக்க | Delhi Snow: டெல்லி கொல்கத்தாவில் இப்படி பனிப் பொழிந்தால் எப்படி இருக்கும்?


ரஷ்யா நீண்ட காலமாக சீனாவிற்கும் பல பகுதிகளுக்கும், குறிப்பாக ஐரோப்பாவிற்கும் இயற்கை எரிவாயுவின் முக்கிய சப்ளையராக இருந்து வருகிறது. ரஷ்யா கடந்த கோடையில் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியை நிறுத்தியபோது, நாடுகள் வேறு இடங்களில் இருந்து பொருட்களை வாங்கத் தொடங்கியதன் விளைவாக, இயற்கை எரிவாயு விலைகள் உயர்ந்தனர்.


மாகாண மற்றும் முனிசிபல் அரசாங்கங்கள் இயற்கை எரிவாயு நுகர்வுக்கான வழக்கமான மானியங்களைக் குறைத்துள்ளன. இதன் விளைவாக, எரிவாயு விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், சமையலுக்குத் தேவையான குறைந்தபட்ச எரிவாயுவை மட்டுமே வீடுகள் பெறுகின்றன.


ஆனால், வீடுகளில் குளிரை சமாளிக்க தேவையான சூடேற்றும் கருவிகளுக்கான வெப்பம் கிடைப்பதில்லை என்பதால் சீனா உறைந்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க சீனா மேலும் இயற்கை எரிவாயு சேமிப்பு தளங்களை உருவாக்குவதன் அவசியத்தை இந்த குளிர்காலம் ஏற்படுத்திவிட்டது.  


 மேலும் படிக்க | கொரோனா கொடுத்த பாதிப்பு! மூன்றே வருடத்தில் வீதிக்கு வந்த சீனாவின் ‘அம்பானி’!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ