ஷாங்காய்: சீனாவின் கடுமையான 'ஜீரோ-கோவிட்' கட்டுப்பாடுகளுக்கு உள்நாட்டில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பிற நாடுகளிலும் அதற்கு ஆதரவு அதிகரிக்கிறது. சீன மக்கள் வழக்கமாக போராட்டங்களில் அதிகம் ஈடுபடுவதில்லை. ஆனால், தற்போது தங்கள் கோபத்தை, போராட்டங்களாக வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். கடந்த வார இறுதியில் சீன மக்கள் நாட்டின் கடுமையான பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினார்கல். இதற்கிடையில், நவம்பர் 26 அன்று 39,791 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியிருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறம், ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான லாக்டவுன்கள், கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தினசரி கோவிட் சோதனைகள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி மக்களின் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றன.



கடந்த வாரம் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ, மக்களின் பெருகிவரும் கோபத்திற்கு ஒரு ஊக்கியாக செயல்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் பத்து பேர் உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில், கட்டிடம் இருந்த பகுதியில் லாக்டவுன் அமலில் இருந்ததால், மக்கள் வெளியேறவும்,  மீட்பு நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்பட்டது என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.


எதிர்ப்புகள் மற்றும் மக்கள் கருத்து தெரிவிப்பதை சீனாவின் அதிகாரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. மக்களின் எதிர்ப்பை, முரட்டுத்தனமாக கையாள்வதை, சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் புகைப்படங்களும் வீடியோக்களும் காணப்படுகின்றன. 


அதிலும், சீனாவின் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஒரு வெள்ளை அல்லது வெற்றுத் தாள் ( white or blank paper) ஒரு சின்னமாக மாறியுள்ளது. அறிக்கையின்படி, இது தணிக்கை அல்லது கைது செய்வதைத் தவிர்ப்பதற்கு ஓரளவு பயன்படுத்தப்படும் தந்திரம் ஆகும்.


மேலும் படிக்க | தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?


"வெள்ளைத்தாள் நாம் சொல்ல விரும்பும் அனைத்தையும் குறிக்கிறது ஆனால் அவற்றை வெளியே சொல்ல முடியாது," என்று ஒரு இளம் போராட்டக்காரர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


ஷாங்காய் நகரில் கூடிய மக்கள், 'சீன கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்துவோம், ஜி ஜின்பிங்கை வீழ்த்துவோம்' என முழக்கமிட்டனர். சீனாவின் தலைமைக்கு எதிரான ஒரு அரிய எதிர்ப்பில், ஒரு குழுவினர் "சீன கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்து, ஜி ஜின்பிங்கை வீழ்த்து" என்று கோஷமிட்டதைக் காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வைரலாகின்றன.


நாட்டின் நிதி மையமான ஷாங்காய் நகரில்ல் கிட்டத்தட்ட மூன்று நாட்களாக மக்களின் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.


மேலும் படிக்க | Covid New Wave: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! கோவிட் அலையால் சீனாவில் லாக்டவுன் அமல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ