புதுடெல்லி: கடந்த சில மாதங்களாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல் போக்குகளுக்கு மத்தியில் எல்லைப் பகுதிகளில் சீனா கேபிள்களை பதிப்பதாக வெளியாகிய செய்திகளை China மறுத்துள்ளது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவும் இந்தியாவும் ராஜதந்திர மற்றும் ராணுவ அதிகாரிகள் மூலம் தொடர்பில் இருப்பதாக சீன அரசு தெரிவிதுள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Wang Wenbin செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.


சீன-இந்திய எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு முக்கியமான இடத்தில்  சீன துருப்புக்கள் fibre optic கேபிள்களை பதிப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது கேபிள்கள் பதிப்பதாக வெளியாகும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது சர்வதேச முக்கியத்துவம் பெறுகிறது.


இதற்கு முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் தீவிரமடைந்து வந்த நிலையில், படைகளை வேகமாக விலக்கிக் கொள்வதாக இரு தரப்பும் அறிவித்தது சர்வதேச அளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. 


மாஸ்கோவில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இடையில் பல மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த கூட்டு அறிவிப்பு வெளியானது.


ALSO READ | சீனாவின் கண்காணிப்பில் Paytm முதல் Zomato வரை பல நிறுவனங்கள் இருப்பதாக பகீர் தகவல்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR